சிலியில் மாணவர்கள் போராட்டம்
தென் அமெரிக்க நாடான சிலியில் கல்வி அமைப்புகளில் சீர்திருத்தம் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.
கல்வி அமைப்புகளில் சீர்திருத்தம் கோரி மாணவர்கள் போராட்டம்
சிலியில் ஓய்வூதியம், சுகாதாரம் மற்றும் கல்வி அமைப்புகளில் சீர்திருத்தம் கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக வௌ்ளிக்கிழமை தோறும் அரசு எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் சான்டியாகோவில் கல்வித்துறையில் சிறந்த உட்கட்டமைப்பு வழங்க வலியுறுத்தியும், மேம்படுத்தப்பட்ட கல்வி திட்டங்களை அமல்படுத்தக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணியாக செல்ல முயன்ற மாணவர்கள் தடுத்து நிறுத்தம்
அப்போது, பேரணியாக செல்ல முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வன்முறை வெடித்தது.
கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டியடித்த போலீசார்
இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் போலீசார் விரட்டியடித்தனர்.