Homeசெய்திகள்உலகம்பிரதமர் மோடியை டிவிட்டரில் பின்தொடரும் எலான் மஸ்க்

பிரதமர் மோடியை டிவிட்டரில் பின்தொடரும் எலான் மஸ்க்

-

பிரதமர் மோடியை டிவிட்டரில் பின்தொடரும் எலான் மஸ்க்

டிவிட்டர் நிறுவன உரிமையாளரும், தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் டிவிட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்கிறார்.

பிரதமர் மோடியை டிவிட்டரில் பின்தொடரும் எலான் மஸ்க்

டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் பிரதமர் மோடியை உலக அளவில் 8 கோடியை எழுபது லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இதன் விளைவாக இந்திய அளவில் அதிக ஃபாலோவர்ஸ்(Followers) கொண்டவர்கள் பட்டியலில் மோடி முதலிடத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் உலக அளவில் அதிக ஃபாலோவர்ஸ்களுடன் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க் தற்போது பிரதமர் மோடியை பின்தொடர தொடங்கி இருக்கிறார்.

பிரதமர் மோடியை டிவிட்டரில் பின்தொடரும் எலான் மஸ்க்

எலான் மஸ்க் பின் தொடர்வோரின் 195 பேரின் பட்டியலில் மோடியின் பெயரும் இருக்கும் ஸ்கிரீன்ஷாட்(Screen shot) படம் தற்போது வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடியை டிவிட்டரில் பின்தொடரும் எலான் மஸ்க்

இந்த புகைப்படத்திற்கு பலரும், பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வரும் என்பதற்கு இது ஒரு நல்ல அடையாளம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ