Homeசெய்திகள்உலகம்இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு

-

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில், 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு வானில் புகை பரவி, சாம்பல் மழை பெய்ததாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

எரிமலை வெடித்து புகை 7 கி.மீ. வானில் பரவியதால் மக்கள் பீதி

மத்திய ஜாவா மாகாணத்தில், யோக்யகர்டா பகுதியில் எரிமலை வெடித்ததால், ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலை குழம்பு வெளியேறியதாக இந்தோனேசியா அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து குறிப்பிட்ட இடத்தை சுற்றிலும் வசிக்கும் மக்கள் உஷார்ப் படுத்தப்பட்டனர். எரிமலை வெடித்ததில், வானில் புகை பரவி, சாம்பல் மழை பெய்தது. இதனால் வாகனங்களில் சாம்பல் படிந்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

உலகிலேயே அதிக எரிமலைகள் கொண்ட நாடு இந்தோனேசியா

இந்தோனேசியாவில், 130-க்கும் அதிகமான எரிமலைகள் உள்ளன. உலகிலேயே இந்தோனேசியாவில்தான் அதிக அளவில் எரிமலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி நிலநடுக்கமும் ஏற்படுகிறது.

MUST READ