Homeசெய்திகள்உலகம்ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

-

- Advertisement -

குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான செல்வம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏறப்படுத்தியுள்ளது.ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

வளைகுடா பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில், அங்கு பணியாற்றி வந்த இந்திய தொழிலாளர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்திய தகவலின்படி, இந்த எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

we-r-hiring

இந்த நிலையில், குவைத்தில் நடைபெற்ற ஈரான் ஏவுகணை தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான செல்வம் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் வேலை செய்து வந்த அவர், தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தான செல்வத்திற்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரின் திடீர் மரணம் குடும்பத்தினரை மட்டுமல்லாது, உறவினர்கள் மற்றும் கிராம மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தகவலை அறிந்த குடும்பத்தினர், அவரது உடலை உடனடியாக இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

அமெரிக்காவில் வெடித்தது மாபெரும் மக்கள் புரட்சி: “No Kings in America” முழக்கத்துடன் வீதிகளில் இறங்கிய லட்சக்கணக்கானோர்!

MUST READ