முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் பட்சத்தில், அங்கு பாதுகாப்பு வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த ராணுவத் திட்டமிடுபவர்களை ஒன்றிணைத்துள்ளன.
லண்டனில் உள்ள பிரிட்டனின் ராணுவக் கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெறும் இந்த இரண்டு நாள் கூட்டத்தின் நோக்கம், “ராஜதந்திர ரீதியிலான ஒருமித்த கருத்தை ஒரு விரிவான ராணுவத் திட்டமாக மாற்றுவது” என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சர்வதேச திட்டமானது வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாப்பது, கடலில் பதிக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை (Mines) அகற்றுவது மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியது.

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரில் ஒரு “நிலையான” போர்நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், இத்திட்டத்திற்காகக் கப்பல்களையும், கண்ணிவெடிகளை அகற்றும் ட்ரோன்களையும் (Mine-clearing drones) வழங்க உறுதி அளித்துள்ளன.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதில் ஐயங்கள் நிலவினாலும், பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John Healey) புதன்கிழமை பேசுகையில், “அடுத்த இரண்டு நாட்களில் இதில் உண்மையான முன்னேற்றம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. தற்போதைய போர்ச் சூழலில் இப்பாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்யும் நோக்கில் இந்த உலகளாவிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஈரானுக்கு மேற்கே 8 கடல் மைல் தொலைவில்’ – ஹார்முஸ் ஜலசந்தியில் மற்றொரு கப்பல் மீது தாக்குதல்;
