
இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. இதில், 3,226 பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தாக்குதலில் 32,500 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
“மழை என்றதுமே பதறும் காலம் மாறிவிட்டது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
மேற்கு கரையில் வியாழன்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதலில் 9 பேர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று அல்- அக்சா மசூதிக்குள் நுழைய முயன்ற பாலஸ்தீன இளைஞர்கள், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காசா பகுதிக்குள் ஹமாஸ் அமைப்பினரின் பல சுரங்கப் பாதைகள் கண்டறியப்பட்டு, தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். இதனிடையே, மிக மோசமான காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் 800 பேரை ரஃபா எல்லை வழியாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என பாலஸ்தீன சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!
அவர்களுக்கு தொடர்ந்து, காஸாவில் சிகிச்சை வழங்க இயலாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.