Homeசெய்திகள்உலகம்ஈரானின் அறிவிப்பால் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஜப்பான்: ஹார்முஸ் ஜலசந்தியில் பச்சைக்கொடி!

ஈரானின் அறிவிப்பால் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஜப்பான்: ஹார்முஸ் ஜலசந்தியில் பச்சைக்கொடி!

-

- Advertisement -

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஜப்பானியக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்ய அனுமதிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த முக்கிய முடிவால் ஜப்பான் அரசாங்கமும் அந்நாட்டு எரிசக்தித் துறையும் பெரும் நிம்மதி அடைந்துள்ளன.ஈரானின் அறிவிப்பால் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஜப்பான்: ஹார்முஸ் ஜலசந்தியில் பச்சைக்கொடி!ஒரு மாத காலப் பதற்றம்

​அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இம்மாத தொடக்கத்தில் தொடங்கிய மோதலால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் மூடியது. இதனால் ஜப்பானுக்குத் தேவையான கச்சா எண்ணெய்க்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. ஜப்பான் தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 93% சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

ஈரானின் அறிவிப்பு:

​ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி (Abbas Araghchi) இன்று அளித்த பேட்டியில், ஜப்பானியக் கப்பல்கள் மற்றும் ஜப்பானுடன் தொடர்புடைய சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தடையின்றிச் செல்ல அனுமதிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்:

​”ஜப்பானிய அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு, அந்நாட்டின் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கான வழிமுறைகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.”

ஜப்பானின் நிம்மதிக்குக் காரணம் என்ன?

எண்ணெய் விநியோகம் தடைப்பட்டதால், இம்மாத தொடக்கத்தில் ஜப்பான் தனது அவசரக்கால இருப்பு வைத்திருந்த எண்ணெயை (Strategic Petroleum Reserves) சந்தையில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. ஈரானின் இந்த அறிவிப்பு அந்த நெருக்கடியைக் குறைக்கும்.

அமெரிக்க நெருக்கடி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க ஜப்பான் தனது ராணுவப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்தார். தற்போது ஈரானே வழிவிட்டிருப்பதால், ஜப்பான் தனது அரசியலமைப்புச் சட்ட வரம்புகளை மீறி ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் குறைந்துள்ளது.

​கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஜப்பானிய யென் (Yen) மதிப்பு சரிந்து வந்தது. இந்த அறிவிப்பு அந்நாட்டுப் பங்குச் சந்தைக்கும் பொருளாதாரத்திற்கும் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் இதுபோன்ற அனுமதியை வழங்கியுள்ள நிலையில், இப்போது ஜப்பானும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. இருப்பினும், இந்தப் போர்ச் சூழலில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டோஷிமிட்சு மொட்டேகி தொடர்ந்து சர்வதேச நாடுகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அமெரிக்கா, ஐரோப்பாவை அதிர வைத்த ஈரான்: நவீன ஏவுகணைகளால் நிலைகுலைந்த பாதுகாப்பு வளையங்கள்!

MUST READ