தொடர் மழை காரணமாக சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 5 பேரை பேரிடர் மேலான் படையினர் தேடி வருகின்றனர்.
வடக்கு சிக்கிமில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சங்கலாங் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்ட பெய்லி பாலம் இடிந்து விழுந்ததால் மங்கன், டிசோங்கு மற்றும் சுங்தாங் பகுதிகள் இடையேயான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
குருடோங்மார் ஏரி மற்றும் யுந்தாங் பள்ளத்தாக்கு போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களில் 1500 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். வெள்ளம் காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதால் பல நகரங்கள் இருளில் மூழ்கி இருக்கின்றன. இடைவிடாத மழையால் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மாங்கன் மாவட்டத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளனர்.
Watch: Heavy rain in North Sikkim has caused damage to houses and roads pic.twitter.com/MesqDqsn6C
— IANS (@ians_india) June 13, 2024
டன் கணக்கில் பாறைகளும் மண்ணும் சரிந்ததால் 25 கற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக கூறிய மீட்பு படையினர் காணாமல் போன 5 பேரை இடிப்பாடுகள் இடையே தேடி வருகின்றனர்.
பாண்டனல் ஈரநிலங்களில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ (apcnewstamil.com)
தெற்கு சிக்கிமில் உள்ள டீஸ்டா நதியில் கறைகளை தாண்டிய வெள்ளத்தால் 50க்கும் மேற்பட்ட சிறு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மேலான் படையினர் ஈடுபட்டு உள்ளனர்.