spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்மொராக்கோ நிலநடுக்கம் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 820 ஆக அதிகரிப்பு!

மொராக்கோ நிலநடுக்கம் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 820 ஆக அதிகரிப்பு!

-

- Advertisement -

மொராக்கோ நிலநடுக்கம் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 820 ஆக அதிகரிப்பு!

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில்  ரிக்டர் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக மாரகேஷ் நகர் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்ததால் கட்டிடங்கள் இடிந்து இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இதனிடையே, இந்த நிலநடுக்கத்தில் முதலில் 296 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

மொராக்கோ நிலநடுக்கம் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 820 ஆக அதிகரிப்பு!

we-r-hiring

 

அதன்படி, நிலநடுக்கத்தில் பிற்பகல் வரை 632 பேர் உயிரிழந்துள்ளதாக மொராக்கோ அரசு தெரிவித்துள்ளது. தற்போது மேலும், 329 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பலி எண்ணிக்கை 820 ஆக உயர்ந்து உள்ளது.

 நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஏராளமானோர்  இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அஞ்சப்படுகிறது.

MUST READ