
அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் மின்சாரம் பாய்ந்து பலி
ஈரான் நாட்டின் பெண்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி வரும் நர்கீஸ் முகமதிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நர்கீஸ் முகமதி யார்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் நர்கீஸ் முகமதி. சமூக செயற்பாட்டாளரான இவர், ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும், கண்டித்தும் போராடியவர். மனித உரிமைகள் மற்றும் அனைவருக்குமான சுதந்திரம் குறித்த உரிமைகளுக்காகக் களமாடி வருபவர். உலக அமைதி தொடர்பாக பல்வேறு சபைகளில் உரையாற்றியவர். தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியுள்ளார்.
அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல- துரைமுருகன்
நர்கீஸ் முகமதிக்கு பல்வேறு சர்வதேச நாடுகளும் விருதுகளை வழங்கி கௌரவித்த நிலையில், தற்போது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு, உலக அரங்கில் அவரையும், அவரது சேவையையும் கௌரவிக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.
ஏற்கனவே, இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்டத் துறைகளுக்கான நடப்பாண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.