- Advertisement -
ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து வரும் தாலிபான்கள் தற்போது விமான பயிற்சியில் ஈடுபட்டு மூன்று பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்ற பிறகு பயங்கரவாதிகளாக அங்கீகரிக்கப்பட்ட தாலிபான்கள் தற்போது அவர்களுடைய அரசில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். குறிப்பாக துப்பாக்கி ஏந்திய தாலிபான்கள் விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கு தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி “தாலிபான் விமான பயிற்சி” நிறுவனத்தில் பயிற்சி பெற்ற சுர்கோல், டோர்கான் மற்றும் ஹெஃப்சாஹுல்லா என்ற மூன்று தாலிபான்கள் பயிற்சிகளை முடித்து விமான பைலட் சான்றிதழை பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை ஆப்கானிஸ்தானை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் காபுல் கான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் ஜெனரல் ஹருண் மொபரேஸ் உள்ளிட்ட பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.