அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே 14 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் மூடுவதற்கு ஈரான் மூடியுள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது வழக்கமான பாணியில் மிகவும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகவும், முழுமையாகவும் திறக்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். தவறும் பட்சத்தில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் (Power Plants) மற்றும் பாலங்கள் (Bridges) மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
தற்போது இரண்டு வார காலத்திற்கு இடைக்கால போர் போர்நிறுத்தம்” (Fragile Truce) அமலில் உள்ளது. இந்த 2 வார கால அவகாசம், ஈரான் தனது பிடியை தளர்த்தினால் மட்டுமே போர் நிறுத்தம் நீடிக்கப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.

உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு (1/5) இந்த வழியாகவே நடைபெறுகிறது. ஈரான் இதை மூடியதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை விரிவுபடுத்தியதைக் கண்டித்தே ஈரான் மீண்டும் ஜலசந்தியை மூடியது. ஆனால், அமெரிக்கா இதற்கு கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
“ஒழுங்காக ஜலசந்தியைத் திறந்துவிடுங்கள், இல்லையெனில் உங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகளை சிதைத்துவிடுவோம்” என்பதே அமெரிக்காவின் தற்போதைய நேரடி எச்சரிக்கையாக உள்ளது.
ஈரானின் 10 அம்ச கோரிக்கை…”சாத்தியமானது” என டிரம்ப் அதிரடி அறிவிப்பு
