
8 இந்தியர்களுக்கு மரணத் தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காவல்துறை மீது ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு!
கத்தார் நாட்டின் ‘அல் தாரா’ நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர், கடந்த 2022- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது கத்தார் நாட்டின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் .பின்னர், அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டுக்கு உளவுப் பார்த்ததாக 8 இந்தியர்கள் மீது குற்றச்சாட்டுகளை அந்நாட்டு நீதிமன்றத்தில் கத்தார் அரசு முன் வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையும் நடைபெற்று வந்த நிலையில், 8 இந்தியர்களுக்கும் மரணத் தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, கத்தார் வாழ் இந்தியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
“இனிப்பு, கார வகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி”- ஆவின் நிறுவனம் அறிவிப்பு!
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “கத்தார் நாட்டில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 இந்தியர்களுக்கும் சட்ட உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளது.