Homeசெய்திகள்உலகம்"இந்திய வம்சாவளி அமைச்சர் மீது ஊழல் புகார்"- சிங்கப்பூர் பிரதமரின் அதிரடி நடவடிக்கை!

“இந்திய வம்சாவளி அமைச்சர் மீது ஊழல் புகார்”- சிங்கப்பூர் பிரதமரின் அதிரடி நடவடிக்கை!

-

 

"இந்திய வம்சாவளி அமைச்சர் மீது ஊழல் புகார்"- சிங்கப்பூர் பிரதமரின் அதிரடி நடவடிக்கை!
Photo: Minister S.Iswaran

இந்திய வம்சாவளியும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பதவியை வகித்து வருபவருமான எஸ்.ஈஸ்வரன் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது.

தக்காளி விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க பார்ப்பதா?- வானதி சீனிவாசன்

இதையடுத்து, சிங்கப்பூரின் லஞ்சம், ஊழல் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த உத்தரவிட்ட சிங்கப்பூர் பிரதமர், விசாரணை முடியும் வரை கட்டாய விடுப்பில் இருக்குமாறு அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, விசாரணையானது நடைபெற்று வருகிறது.

மேலும், அரசின் சலுகைகள், அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் அனைத்தையும் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் வகித்து வந்த போக்குவரத்துத்துறையை மூத்த அமைச்சர் சீ ஹோங் டாட் கவனிப்பார் என்றும் பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Dmkfiles பாகம் 2-ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம்- அண்ணாமலை

தமிழகத்திற்கு அடிக்கடி வந்துச் செல்லும் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், தமிழகத்தில் உள்ள பழனி உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற கோயில்களின் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். அதேபோல், சமீபத்தில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு சென்றிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ