Homeசெய்திகள்உலகம்தகிக்கும் வெப்பத்தில் ஆஸ்திரேலியா

தகிக்கும் வெப்பத்தில் ஆஸ்திரேலியா

-

தகிக்கும் வெப்பத்தில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடும் பனிப்பொழிவு தாக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் சுட்டெரிக்கும் வெப்பம் நிலவி வருகிறது. பெருவாரியான நகரங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக மேற்கு சிட்னியில் உள்ள புறநகர் பகுதியான பென்ரித்தில் இன்று பிற்பகல் 40 புள்ளி ஒன்று டிகிரி செல்சியசும், உள்பகுதியில் உள்ள சில நகரங்களில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. கடும் வெப்பம் காரணமாக சிட்னியில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதே போன்று, நியூ சவுத் வேல்ஸில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் காரணமாக 35 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, இரண்டு நாட்களுக்கு வெப்பம் மற்றும் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வெப்பத்தின் தாக்ககத்தை தணிக்க மக்கள் கடற்கரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். சிட்னியில் அதீத வெப்பம் காரணமாக கடற்கரையில் குடும்பத்தினருடன் குவிந்த மக்கள், கடலில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இதனிடையே, நியூ சௌத் வேல்ஸில் உள்ள பேட்ஸ்மேன் பேயில் இருந்து விக்டோரியா மாகாணம் வரையில் உள்ள மலைத்தொடர்களில் காட்டுத் தீ ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

MUST READ