
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.
அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து, நடத்துனருடன் வாக்குவாதம் – நடிகை கைது
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள தனது இல்லத்தில் விருந்தினர்களுடன் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்க்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவது முக்கியம் என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதற்காக, இந்த தீபாவளி அமையட்டும் என வாழ்த்துக் கூறிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் என்றும், அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்க ஆதரிக்கும் என்றும் கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு..
59 வயது இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ், அழைப்பு விடுத்த தீபாவளி கொண்டாடட்டத்தில் 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போல, கமலா ஹாரிஸ் விருந்தினர்களுடன் உரையாடவில்லை. மேலும், தீபாவளி கொண்டாட்டத்தைப் புறக்கணிக்கவும் பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தனர்.