ஆஸி. நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய எம்.பி.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர், சக பெண் எம்.பி.யிடம் காதலை வெளிப்படுத்திய சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது.

விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி. நாதன் லேம்பர்ட், முதன்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது யாருமே எதிர்பாராத விதமாக, தனது காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினர் நோவா எர்லிச்சைப் பார்த்து, திருமணம் செய்து கொள்ளலாமா என கேள்வி எழுப்பினார். தற்போது மோதிரம் கொண்டுவரவில்லை என்றும் இரவில் அதைத் தருவதாகவும் அவர் தெரிவித்தார். இதைப் பார்த்து கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். பேச்சு முடிந்த பின் நாதன் லேம்பர்ட் கொடுத்த மோதிரத்தை நோவா எர்லிச் ஏற்றுக் கொண்டார். நோவா எர்லிச் மீதான காதலை சிறந்த தருணத்தில் வெளிப்படுத்த தீர்மானித்திருந்ததாகவும், கோவிட் காரணமாக அதற்கு சரியான நேரம் வாய்க்கவில்லை என்றும் கூறிய நாதன் லேம்பர்ட், இதைவிட வேறு சிறந்த இடம் இல்லை என்று கருதி நாடாளுமன்றத்தில் அன்பை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார். ஏற்கனவே நாதன் லேம்பர்ட்டுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவரை மணமுடிக்க நோவா எர்லிச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
Wedding bells. ALP Preston MP Nathan Lambert has used his inaugural speech in parliament to proposal to his partner… but he had no ring . @abcmelbourne #springst pic.twitter.com/TiKpaGRrge
— Richard Willingham (@rwillingham) March 7, 2023



