Homeசெய்திகள்உலகம்பெருமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா

பெருமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா

-

பெருமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா

மலேசியாவில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மலேசியாவின் ஜோஹரில் பெய்த கனமழையால், அப்பகுதியே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. வழக்கமாக அங்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவ மழை பெய்யும் நிலையில், எதிர்பாராதவிதமாக இந்த மார்ச் மாதத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

40 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்க வைப்பு

ஜோஹர் நகர வீதிகளி்ல் வெள்ளம் நிறைந்திருக்க, பல்வேறு வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடம் தேடிச் செல்கின்றனர். அவர்களுக்கு உதவ 200 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கனமழைக்கு இதுவரை நான்கு பேர் பலியான நிலையில், 40 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஜோஹர் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கால்நடைகளை மீட்டு உணவளிக்கும் தன்னார்வலர்

இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜோகர் மாநிலத்தில், வீடுகளில் விட்டு செல்லப்பட்ட வளர்ப்பு பிராணிகளை தன்னார்வலர் ஒருவர் தேடி கண்டுபிடித்து உணவு அளித்து வருகிறார்.

MUST READ