spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் துருவ் விக்ரம் .... பிரபல நடிகருடன் கூட்டணி!

தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் துருவ் விக்ரம் …. பிரபல நடிகருடன் கூட்டணி!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் துருவ் விக்ரம் .... பிரபல நடிகருடன் கூட்டணி! அதைத்தொடர்ந்து இவர் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்தார். தற்போது இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பைசன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து துருவ் விக்ரம், சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் துருவ் விக்ரம் .... பிரபல நடிகருடன் கூட்டணி! இந்நிலையில் துருவ் விக்ரமின் புதிய படம் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது துருவ் விக்ரம் பைசன் படத்தை தொடர்ந்து தெலுங்கில் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். அதன்படி இவர் நடிக்க உள்ள படமானது இரண்டு ஹீரோக்களின் கதையாக உருவாக இருக்கிறதாம். எனவே துருவ் விக்ரம், பிரபல நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம். மேலும் இதனை விருப்பாக்ஷா படத்தின் இயக்குனர் கார்த்திக் வர்மா தண்டு இயக்க உள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ