spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉடுமலை அருகே ஜீப் மீது டெம்போ ட்ராவலர் மோதி விபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 4...

உடுமலை அருகே ஜீப் மீது டெம்போ ட்ராவலர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

-

- Advertisement -

உடுமலை அருகே  ஜீப் மீது டெம்போ ட்ராவலர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நடைபெற்ற தனது உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்று இருந்தார். பின்னர் நேற்றிரவு அனைவரும் பொலிரோ ஜீப்பில் உடுமலை மார்க்கமாக பழனிக்கு திரும்பி கொண்டிருந்தனர். நள்ளிரவு உடுமலை அருகே புறவழிச்சாலையில் கருப்புசாமி புதூர் என்ற இடத்தின் அருகே சென்றபோது தியாகராஜனின் ஜீப் மீது எதிரே பழனியில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற டெம்போ டிராவலர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

we-r-hiring

இந்த கோர விபத்தில் பொலிரோவில் பயணம் செய்த தியாகராஜன், அவரது மனைவி ப்ரீத்தி, மகன் ஜெய பிரியன் மற்றும் அவரது தாயார் மனோன்மணி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தியாகராஜனின் தந்தை நாட்ராயன், அவரது மற்றொரு மகன் ஜீவப்பிரியன் ஆகியோர் பலத்த காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் டெம்போ ட்ராவலரில் பயணம் செய்த 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக உடுமலை காவலதுறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ