spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விழுப்புரத்தில் சாலையில் ஆறாக ஓடிய டீசல்

விழுப்புரத்தில் சாலையில் ஆறாக ஓடிய டீசல்

-

- Advertisement -

விழுப்புரத்தில் சாலையில் ஆறாக ஓடிய டீசல்சாலையில் ஆறாக ஓடிய டீசல்லை முன்னெச்சரிக்கையாக நுரையை பீய்ச்சி அடித்தனர் தீயணைப்புத்துறை.

விழுப்புரத்தில் சாலையில் ஓடிய ஆம்னி பேருந்தில் டீசல் டேங்க் ஒன்றில் ஓட்டை விழுந்துள்ளது. அதனை அடுத்து சாலையில் 400 லிட்டர் டீசல் ஆறாக ஓடி இருக்கிறது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு  துறையினர் தீப்பற்றாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டீசலின் மீது நுரையை பீய்ச்சி அடித்துள்ளனர்.

we-r-hiring

தஞ்சாவூரில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து விழுப்புரம் தீயணைப்பு நிலையம் அருகில் வரும் போது திடீரென டீசல் டேங்க் உடைந்து கீழே இறக்கி உள்ளது. அதிலிருந்து 400 லிட்டர் டீசல் ஆறாக ஓடி இருக்கிறது. இதனை  சாலையில் பார்த்தவர்கள் பேருந்து ஓட்டுநர் இடம் கூறியதை அடுத்து பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுனர் பயணிகளை பேரூந்தில் இருந்து இறங்கச் செய்துள்ளனர்.

உடனடியாக தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் சாலை முழுவதும் பரவி இருந்த டீசல் மீது நுரையை தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஓடிய பேருந்தில் திடீரென டீசல் டேங்க் உடைந்து சாலை முழுவதும் டீசல் ஆறாக ஓடியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ