spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூன் நீக்கம்! - தொல்.திருமாவளவன் அதிரடி நடவடிக்கை

விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூன் நீக்கம்! – தொல்.திருமாவளவன் அதிரடி நடவடிக்கை

-

- Advertisement -

விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூன் நீக்கம் - தொல்.திருமாவளவன் அதிரடி நடவடிக்கை
ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையை தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்க விசிக நிறுவனர்  தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆதவ் அர்ஜூனா நீக்கம் குறித்த தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

”கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.

we-r-hiring

இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி,
கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஆதவ் அர்ஜூனா  கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

விஜய் கையால் விருது பெற்றது அருவெறுப்பாக இருந்தது… அம்பேத்கரிய செயற்பாட்டாளர் மதூர் சத்யா விளாசல்!

MUST READ