அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தியதும் அரசியல் சாசனத்துக்கு எதிரானதும் காங்கிரஸ் கட்சிதான்; காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கருக்கு எதிரானது; அம்பேத்கர் குறித்து நான் பேசியதில் உண்மையை திரித்து பேசுகிற காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து கொந்தளிப்பு உருவானதால் டெல்லி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தந்தார் அமித்ஷா.

இந்நிலையில் அமித்ஷாவை கண்டித்து, ‘‘கோயிலுக்குள் நுழைந்தால் அக்கோயிலுக்குரிய “கடவுள்” பெயரைச் சொல்லுவது தான் வழிபடுவோரின் வாடிக்கை. அதேபோல- நாடாளுமன்றத்துக்குள்ளே நுழைந்தால் புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரைத் தானே சொல்லமுடியும்?
கோயிலில் கடவுள் ! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர்! இதனையெல்லாம் அறியாதவரா என்ன உள்துறை அமைச்சர்? அவ்வளவு வெறுப்பு அவருக்கு புரட்சியாளர் அம்பேத்கர் மீது.
சங்பரிவார் அமைப்பினரின் ஆழ் நெஞ்சில் என்னவுள்ளது என்பதை அவரே இன்று அம்பலப்படுத்திவிட்டார். சனாதனத்தில் ஊறிய நெஞ்சு! சமத்துவத்துக்கு எதிரான நஞ்சு!’’ எனத் தெரிவித்துள்ளார்.