spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபவன் கல்யாணுக்கு ஆபத்தா? ஆந்திரா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் !

பவன் கல்யாணுக்கு ஆபத்தா? ஆந்திரா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் !

-

- Advertisement -

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நிகழ்ச்சியில் ஐ.பி.எஸ். அதிகாரி சீருடையில் மர்ம நபர் ஒருவர் வலம் வந்துள்ளார். எனக்கு பாதுகாப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணி செய்வது மட்டுமே எனக்கு தெரியும் போலி ஐ.பி.எஸ்.அதிகாரி குறித்து டி.ஜி.பி., உள்துறை, புலனாய்வு அமைப்புதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாணுக்கு ஆபத்தா? ஆந்திரா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் !ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்துக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடந்த இரண்டு நாட்கள் முன்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது 41 வயதான பாலிவாடா சூர்ய பிரகாஷ் என்பவர் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி போல் போலீஸ் சீருடை அணிந்து துணை முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதலில் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டாலும், சிறிது தூரம் நடந்து மீண்டும் ஒருமுறை பவன் கல்யாண் பின்னாள் சுற்றி வந்தார். பவன் கல்யாண் சென்ற வியூ பாயிண்டிலிருந்து அடிக்கல்லுக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தார்.

பவன் கல்யாணுக்கு ஆபத்தா? ஆந்திரா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் !சூர்ய பிரகாஷின் நடத்தை குறித்து சிலர் புகார் அளித்ததையடுத்து சூர்ய பிரகாஷ் கைது செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் துணை முதல்வர் பவன் கல்யாணின் நிகழ்ச்சி முடிந்த பின்னரே அவர் அடிக்கல் செய்யப்பட்ட இடத்தில் போட்டோ எடுத்ததாகவும், பவன் கல்யாண் அருகில் செல்லவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரணையில் சூர்யபிரகாஷின் தந்தை தட்டி ராஜேருவில் 9 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும், ஆனால் அது பத்திர பதிவு செய்யப்படாததால் அந்த நிலத்தை அடைய போலீஸ் வேடமணிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பவன் கல்யாணுக்கு ஆபத்தா? ஆந்திரா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் !இதனையடுத்து போலி ஐ.பி.எஸ். அதிகாரி சூர்யா பிரகாஷிடம் இருந்து கார், அடையாள அட்டை, லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இதுகுறித்து துணை முதல்வர் பவன் கல்யாண் கூறுகையில் எனது நிகழ்ச்சியில் போலி ஐ.பி.எஸ். அதிகாரி வலம் வந்தது குறித்து அறிந்து எனது துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். எனக்கு மக்களுக்காக பணி செய்வது மட்டுமே தெரியும். எனது உயிருக்கு பாதுகாப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுடன் பணி செய்வது மட்டுமே தெரியும்.

போலி ஐ.பி.எஸ். அதிகாரி எனது நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்றார் சக போலீசார் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்று தெரியவில்லை யார் வந்தாலும் இப்படிதான் இருப்பார்களா ? இதற்கு மாநில டி.ஜி.பி., புலனாய்வு அமைப்பு, உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மன்மதலீலை…இதே வேலையா இருப்பீங்களா…

 

MUST READ