spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்‘இழவு வீட்டில் பாகற்காய் பறித்த பாவி அவன்...’ சீமானை நார் நாராய் கிழித்த முரசொலி..!

‘இழவு வீட்டில் பாகற்காய் பறித்த பாவி அவன்…’ சீமானை நார் நாராய் கிழித்த முரசொலி..!

-

- Advertisement -

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றிய அதூறு பேச்சால் திராவிட கட்சிகள் பெரும் கோபமடைந்துள்ளன. சீமான் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார். இதனால் அவர் கைது செய்யப்படும் சூழலும் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, தலையங்கம் பகுதியில், ‘‘95வயது வரை மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு தமிழ்ச் சமுதாயத்தின் விடியலுக்காக உழைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைப் பற்றிப் பேச இந்தக் கழிசடைக்கு அருகதை இருக்கிறதா?சீமான் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் - புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்

we-r-hiring

தன்னைத் தானே மோகித்து, சதா சோற்றைப் பற்றியே சிந்தித்து, அடுத்தவரை மிரட்டியே பணம் திரட்டி. வாயை அடகு வைப்பதையே பிழைப்பாகக் கொண்டு வாழும் புதுப் பிராணி ஒன்றைப் பிடித்து பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேச கூலி கொடுத்துக் கொண்டிருக்கிறது ஆரியக் கூட்டம். அவனுக்கு வெட்கமும் கிடையாது. மானமும் கிடையாது. சூடும் கிடையாது. சொரணையும் கிடையாது. எவன் கொடுத்தாலும் எதிர் வீட்டைப் பார்த்துக் குரைப்பான். எவன் ஏவி விட்டாலும் எதிரே நிற்பவனைப் பார்த்து கனைப்பான்.

உழைக்காமல் உண்டி பெருக்குவதற்கு எது எப்போது பயன்படுமோ, அதை அப்போது பயன்படுத்திக் கொள்பவன் அவன். செத்து மடியும் ஈழத்தமிழன் வீட்டில் இருந்தே சொத்து பறித்து வாழ்ந்தவன். இழவு வீட்டில் காசுக்கு ஒப்பாரி வைக்கப் போன ஒருத்தி, ‘பந்தலிலே பாவக்காய்’ பாடிய பாட்டை தமிழ்நாடு அறியும். ‘பந்தலிலே பாவக்காய்… பந்தலிலே பாவக்காய்’ என்று ஒருத்தி ஒப்பாரி வைக்க, ‘போகையிலே பார்த்துக்கலாம்.. போகையிலே பார்த்துக்கலாம்’ என்று இன்னொருத்தி பாடியதாக ஒரு பாட்டு உண்டு. இழவு வீட்டில் பாகற்காய் பறித்த பாவி அவன்தான்.

ஐயோ பாவம்! இவன் பேச்சை உண்மை என நம்பி அந்த மக்கள் பணம் அனுப்பி பிழைக்க வைத்தார்கள். அவர்களது உழைப்பைச் சூறையாடி உண்டு கொழுத்தான். நாள்பட நாள்பட அவர்களுக்கும் இது ‘விஷஜந்து’ என்று தெரிந்து போனதால் ‘டாலர்’ அனுப்புவதை நிறுத்தினார்கள். இவனுக்கு டல்லடித்தது பிழைப்பு.

ஈழத்தமிழரை ஆதரித்துப் பிழைப்பது முடிவுக்கு வந்ததும் ஈனப்பிழைப்பு ஐடியா ஒன்று கிடைத்தது. திராவிட இயக்கத்தை, திராவிடத்தை, தந்தை பெரியாரை, திராவிட இயக்கத் தலைவர்களை திட்டிப் பிழைக்க இங்கே சிலரால் தட்சணை தரப்படுகிறது என்ற தகவல் கிடைத்தது, அந்தப் பக்கம் போனான்.

‘திராவிடத்தைத் திட்ட நாக்கு வாடகைக்கு விடப்படும்’ என்பதுதான் அவனது கட்சிக் கொள்கை. இப்படி ஒருவனுக்காகத் தானே அந்தக் கும்பல் காத்துக் கிடக்கிறது. உடனே ‘மார்வாடி’ மூலமாக காசுகளை அனுப்புகிறது. ‘கத்து, காசு’. இதுதான் உத்தரவு. கத்தக் கத்தக் காசு. ‘இன்னும் இன்னும்’ என்று கத்தச் சொல்கிறார்கள். சவுண்ட்டுக்குத் தக்க அளவில் அமௌண்ட்! ‘..ச்சீ!’ – இப்படி ஒரு பிழைப்பை இந்த யுகத்தில் எவனும் பிழைக்கவில்லை!

ஒரு விஜயலட்சுமிதான் வெளியில் வந்துள்ளார். அவர் இவனுக்குச் சொல்லும் அடைமொழியை இங்கே நாம் பயன்படுத்த முடியாது. ஆனால் அவனுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. உடம்பில் உடையில்லை என்பதை உணராதவன். சொரணை சிறிதும் இல்லாதவன். உமிழ்நீரைச் சிறுநீராய் கழிக்கும் கழிசடையவன்.

‘மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒருவனுடன் போராட முடியாது’ என்றார் தந்தை பெரியார். அது இவன்தான். மானம் இருந்திருந்தால் விஜயலட்சுமியின் ஒரு வீடியோவுக்கே தலைமறைவு ஆகி இருப்பானே! ஆயிரம் வீடியோக்களில் ஒரு லட்சம் வசைச்சொற்களைக் கேட்ட பிறகும் ஒருவனால் எப்படி மீடியாக்களுக்கு முன்னால் பேட்டி தர உட்கார முடிகிறது.கோவையில் தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மய்யம்- கி.வீரமணி வரவேற்பு

சொந்தப் பணத்தைக் கட்சிக்குக் கொடுத்து, இறந்த பிறகும் இயக்கப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த வகை செய்துவிட்டுப் போன ஒரு தலைவனை, ஊரார் பணத்தில் உண்டு கொழுத்து, மிரட்டிப் பறித்து குடும்பம் நடத்தும் நீ பேச அருகதை இருக்கிறதா?

தமிழ் நிலத்தில் எத்தனையோ போராளிகளை உருவாக்கியவர் தந்தை பெரியார். முப்பது ஆண்டுகள் ஒரு போராளி அமைப்பை நடத்திய பிரபாகரனையே ‘ஹோட்டல் ஓனர்’ போல உருவகப்படுத்தி விட்டவன் நீ!

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழக்கமிட்டவர் பெரியார். இந்திக்கு எதிராக 1938 முதல் போராடத் தொடங்கியவர் பெரியார். ‘தமிழா; தலைநிமிர்!’ என்று இயக்கம் நடத்தியவர் பெரியார். இராமாயணம் கோலோச்சிய காலத்தில் திருக்குறளை அந்த இடத்தில் கொண்டு வந்து வைத்தவர் பெரியார். தமிழ்நிலம் காத்தவர் பெரியார். ‘தமிழ்நாடு என்று பெயர் சூட்டாமல் நான் ஏன் வாழவேண்டும்’ என்றவர் பெரியார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 1919 முதல் தீர்மானங்கள் கொண்டு வந்தவர் பெரியார். அதற்காகவே இயக்கங்கள் கண்டவர் பெரியார். அவரது போராட்டத்தால் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமே முதல் திருத்தம் கண்டது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக கோவில் நுழைவுப் போராட்டம் தொடங்கியவர் பெரியார். அதைச் சட்டமாக்கியவர் தமிழினத் தலைவர் கலைஞர். இப்படி ஒரு சாதனையை உன் வாழ்க்கையில் இருந்து சொல். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிய ‘க்ரைம்’ நம்பர் வேண்டுமானால் இப்படி அடுக்கலாம். மானங்கெட்டவன்.

‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு’ என்று சொன்னது பெரியாரின் பொன்மொழி! ‘மாமா, கெட்டவன் இல்லை. கேடு கெட்டவன்’ என்பது உனது பொன்மொழி! நீ பேசு. அது உனக்குத் தரப்படும் கூலிக்கு நீ செய்யும் பிழைப்பு. இதுமாதிரி நடந்த எத்தனையோ விபூதி வீரமுத்துகள் மண்ணுக்குள் புதைந்துவிட்டார்கள். பெரியார்தான் மண்ணைப் பிளந்து எழுந்து சிலையாக, மலையாக நிற்கிறார். அவர் மீது செருப்பு வீசிய இடத்தில் இன்று சிலை இருக்கிறது. ஆனால் நீ நடந்த தடத்தில் ஒரு புல் கூட முளைக்காது’’எனத் தெரிவித்துள்ளது.

 

MUST READ