spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமொழிப்போராட்ட தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோருக்கு மரியாதை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோருக்கு மரியாதை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

இந்தி எதிர்ப்பு போரில் உயிர்தீர்த்த மொழிப்போராட்ட தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோருக்கு மரியாதை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்பு போரில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தி வீர வணக்கம் முழக்கமிட்டனர். உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் நடராசன் மற்றும் தாளமுத்து திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

we-r-hiring

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சாமிநாதன்,  வடசென்னன நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஸ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர்நீத்த தோழர்கள் நடராசன்,தாளமுத்து ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் அவர்களது நினைவிடமானது 34 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில்  புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக மூலக்கொத்தளத்தில் உள்ள நினைவிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்  நடைபயணமாக நினைவிடம் வருகை புரிந்தார்கள்.

நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காரணமே விஜய் தான்… இன்னும் பலரை திமுகவில் இணைப்பேன் – சீமானுக்கு, ராஜீவ்காந்தி சவால்!

MUST READ