spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஓ.பி.எஸை சந்தித்த செங்கோட்டையன் - ஆடிப்போய்க் கிடக்கும் எடப்பாடியார் அணி..!

ஓ.பி.எஸை சந்தித்த செங்கோட்டையன் – ஆடிப்போய்க் கிடக்கும் எடப்பாடியார் அணி..!

-

- Advertisement -

எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆடிப் போய்க்கிடக்கின்றனர்.sengottaiyan

இந்நிலையில் ஏற்கெனவே அதிமுகவில் பிரிந்து செயல்பட்டு வரும் ஓ.பி.எஸ் தரப்பும் செங்கோட்டையனுக்கு தனது ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ஓ.பி.எஸ். – செங்கோட்டையன் சந்திப்பு நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. சட்டப்பேரவையின் 3 ஆம் எண் நுழைவுவாயில் அருகே இருவரும் சந்தித்து பேசிக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

we-r-hiring

இந்நிலையில், பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும். ஈகோவை விட்டு கொடுத்து அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை மீட்க வேண்டும். 2026ல் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும்” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

OPS

வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ”பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும். ஈகோவை விட்டு கொடுத்து அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை மீட்க வேண்டும். 2026ல் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும். அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடிக்கும் இடையே கருத்துவேறுபாடு உள்ளதாக கூறுவது சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும்.

இருந்தாலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் சிறப்பாக பணியாற்றியவர்.

வரி கட்டாமல் மது பாட்டில்களை நேரடியாக டாஸ்மார்க் கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது ஒரு மோசமான செயல். தற்போதுதான் சோதனைகள் நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்த பின்னர் யார் தவறு செய்துள்ளார்கள் என்பது தகவல் வெளியாகும்.

பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ஜூன் 27க்கு ஒத்திவைப்பு

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக வைத்திருந்தார்கள். அதே போன்று பிரிந்து உள்ள அதிமுக சக்திகள் ஒன்று சேர்ந்து 2026 ஆம் சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்தார்.

MUST READ