spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய சேதங்கள் தவிர்ப்பு - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய சேதங்கள் தவிர்ப்பு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

-

- Advertisement -

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 205 நிவாரண முகாம்களில் 9280 நபர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள தாகவும், இந்த புயலுக்கு இதுவரை 4 பேர் இறந்துள்ளதாகவும் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய சேதங்கள் தவிர்ப்பு -  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய அளவிலான சேதங்கள் தவிர்கப்பட்டுள்ளது. அடுத்த மழை வந்தாலும் புயல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதென வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

we-r-hiring

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். அப்போது பேசிய அவர், புயலின் காரணமாக நிறைய இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன என்றார்.

புயலின் காரணமாக நிறைய இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன என்றார்.

இதுவரை 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று மதியத்திற்குள் முழுமையான சேத விவரங்கள் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

உரிய நேரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக பெரிய அளவிலான சேதங்கள் தவிர்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் 205 நிவாரண மையங்களில் 9280 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவாசி தேவைகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

அடுத்த மழை வந்தாலும் புயல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதென்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகள் மற்றும் நிவாரணங்கள் ஓரிரு நாட்களில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்டஸ் புயலின் பாதிப்பில் இருந்து மீண்டு மதியத்திற்குள் இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

மழை வந்தால் தான் அடுத்துவரும் காலங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்படாது என்றும் அடுத்ததாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இதுவரை அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த மழை வந்தாலும் புயல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதென்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

MUST READ