spot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்கிறிஸ்தவர்கள் புனித வாரம் கொண்டாட்டம்

கிறிஸ்தவர்கள் புனித வாரம் கொண்டாட்டம்

-

- Advertisement -

கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். தவக்காலத்தில் இந்த வாரம் புனித வாரம் என கடைபிடிக்கப்படுகிறது.

கிறிஸ்தவர்கள் புனித வாரம் கொண்டாட்டம்

ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வகையில்  கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலத்தை கடைபிடிப்பார்கள். இவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி “சாம்பல் புதன்” (Ash Wednesday) திருநாளுடன் தொடங்கும்.

we-r-hiring

கிறிஸ்தவர்கள் புனித வாரம் கொண்டாட்டம்

இயேசு கிறிஸ்து தனது 33-வது வயதில் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். இதை நினைவுப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள்.

இயேசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகில் மனிதனாக பிறந்து வாழ்ந்தார். சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். இதை நினைவுப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் உள்ள  கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள்.

கிறிஸ்தவர்கள் புனித வாரம் கொண்டாட்டம்

இந்த தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை, தியானம், திருத்தல யாத்திரைகள், சேமிப்புகளின் மூலம் பிறர் நலப் பணிகள் செய்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தவக்காலத்தில் இந்த வாரம் புனித வாரம் என கடைபிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து அவரது சீடரான யூதாசால் காட்டி கொடுப்பதற்கு முன்பு இரவு சீடர்களுடன் அமர்ந்து இரவு உணவு உண்டார்.

கிறிஸ்தவர்கள் புனித வாரம் கொண்டாட்டம்

அப்போது அவர் பிறருக்கு பணி செய்து வாழ்வதன் அவசியத்தை சீடருக்கு உணர்த்தும் வகையில் தமது இடுப்பில் ஒரு துணியை சுற்றி கட்டி கொண்டு சீடர்களின் பாதங்களை கழுவி துடைத்தார்.

அதை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் இன்றைய (வியாழக்கிழமை) தினத்தை பெரிய வியாழன் (Maundy Thursday) என்று கடை பிடிக்கிறார்கள். இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் மாலை சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெறும்.

கிறிஸ்தவர்கள் புனித வாரம் கொண்டாட்டம்

குறிப்பாக கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலியின் போது இயேசுவின் சீடர்கள் 12 பேரை உணர்த்தும் வகையில் 12 பக்தர்களின் பாதங்களை அருட்பணியாளர்கள் கழுவி துடைத்து முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெறும்.

குழித்துறை மறை மாவட்ட கத்தோலிக்க ஆலயங்களில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் இந்த பாதம் கழுவும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

MUST READ