spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇது வேற லெவல்🔥... பாலிவுட் வரை சென்று கெத்து காட்டிய சிவகார்த்திகேயன்!

இது வேற லெவல்🔥… பாலிவுட் வரை சென்று கெத்து காட்டிய சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் பாலிவுட் வரை சென்று விருது வாங்கியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது பாலிவுட் வரை சென்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். ஆம், சமீபத்தில் நடைபெற்ற ‘Pinkvilla Style Icons’ விருது விழாவில் மிகவும் நேர்த்தியான திரை ஆளுமை (Most Elegant Personality) விருதை சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார்.

we-r-hiring

 

Source: PinkVilla

தமிழ் நடிகருக்கு பாலிவுட்டில் அங்கீகாரம் கிடைப்பது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அவரது மகள் ஜான்வி கபூர் இருவரும் இணைந்து இந்த விருதை சிவகார்த்திகேயனுக்கு வழங்கியுள்ளனர்.

சிவகார்த்திகேயன் கருப்பு கலர் கோட் சூட்டில் மிகவும் ஸ்டைஷ் ஆக இந்த விருது விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் விருது வாங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த விருதை அடுத்து அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை எடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். நடிகை சாய் பல்லவி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

MUST READ