spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நண்பர்களுடன் டீ குடிக்க போறீங்களா உஷார்! பணம் கேட்டு சித்திரவதை செய்ததாக கல்லூரி மாணவன் போலீசில்...

நண்பர்களுடன் டீ குடிக்க போறீங்களா உஷார்! பணம் கேட்டு சித்திரவதை செய்ததாக கல்லூரி மாணவன் போலீசில் புகார்…

-

- Advertisement -

சென்னையில் கல்லூரி மாணவனை கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு சித்திரவதை செய்ததாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார். கடத்திச் சென்றதாக கூறப்படும் நபர்கள் குறித்தும் கொடுக்கல் வாங்கல் அல்லது வேறு ஏதேனும் கடத்தலுக்கு காரணமா என்றும் நோலம்பூர் காவல் நிலையம் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நண்பர்களுடன் டீ குடிக்க போறீங்களா உஷார்! பணம் கேட்டு சித்திரவதை செய்ததாக கல்லூரி மாணவன் போலீசில் புகார்…சென்னை நொளம்பூர் பகுதியை  சேர்ந்தவர் ஆகாஷ்(22) இவர் காட்டாங்கொளத்தூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை இவரது வீட்டிற்கு வந்த ஹரி என்கிற நண்பர் ஆகாஷை டீ குடிக்க நொலம்பூர் பாரதி சாலையில் உள்ள டீக்கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் டீ குடித்துக் கொண்டு இருந்த நிலையில் அங்கு மேலும் ஹரியின் நண்பர்கள் மனோஜ் மற்றும் சபரி ஆகிய இருவர்  இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

ஹரி மற்றும் ஆகாஷ் மேலும் ஹரியின் நண்பர்களான மனோஜ் மற்றும் சபரி ஆகிய நான்கு பேரும் இரு சக்கர வாகனத்தில் திருவேற்காடு பகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு இடத்தில் வைத்து ஆகாஷை அடித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆகாஷ் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரை திருவேற்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து  வைத்து சித்தரவதை செய்த நிலையில் ஒரு கட்டத்தில்  உண்மையிலேயே ஆகாஷிடம்  பணம் இல்லை என்பதை உணர்ந்த ஹரி மற்றும் அவனது கூட்டாளிகளான மனோஜ் மற்றும் சபரி தங்களுக்கு  பணம் எதுவும் கிடைக்காததால் ஆகாஷ் வைத்திருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு ஆகாஷை அழைத்து வந்து திருவேற்காட்டில் ஒரு இடத்தில் இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து  தப்பி சென்றுள்ளனர்.

we-r-hiring

ஹரி மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளான மனோஜ் சபரி ஆகிய மூன்று பேரும் தாக்கியதால் பாதிப்படைந்த கல்லூரி மாணவனான ஆகாஷ் முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில். நடந்த சம்பவம் குறித்து நொளம்பூர் காவல் நிலையம் சென்று அங்கு தன்னை 3 நபர்கள் சேர்ந்து கடத்திச் சென்று அடித்து சித்திரவதை செய்ததாகவும் தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு தன்னை சாரா மாறியாக தாக்கியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆகாஷ் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து முதற்கட்டமாக கடத்திச் சென்றதாக கூறப்படும் ஹரி மற்றும் அவனது கூட்டாளிகள்  குறித்து போலீசார் ஆகாசிடம் விசாரணை செய்த பொழுது ஹரி என்பவர் தன்னுடைய நண்பர் என்றும் ஹரியின் அண்ணனிடம் தான் பணம் பெற்றதாகவும் அந்த பணத்தை திரும்ப தரும்படி ஹரி கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் தன்னிடம் தற்போது பணம் இல்லை என கூறிய நிலையில் ஹரியின்  நண்பர்களான மனோஜ் மற்றும் சபரி ஆகிய இரண்டு பேரின் உதவியோடு தன்னை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கி சித்திரவதை செய்ததாக ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் நொளம்பூர் காவல் நிலைய போலீசார் பாரதி சாலையில் உள்ள டீக்கடை அதன் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் திருவேற்காடு பகுதியில் ஆகாஷ் குறிப்பிடும் பகுதிகள் அங்கே உள்ள சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை கைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நொளம்பூர் காவல் நிலைய போலீசார் ஆகாஷ் சொல்வதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது கடத்தல் கும்பலுக்கும் ஆகாசுக்கும் உள்ள தொடர்பு என்ன? ஏதாவது கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகாஷ் தன்னை தாக்கிய  ஹரி மற்றும் அவனது கூட்டாளிகளான சபரி மற்றும் மனோஜ் என தெரிவித்த நிலையில் அவர்களை பிடித்து விசாரித்தால் உண்மை தெரிய வரும் என்கிற அடிப்படையில் அவர்களை பிடிப்பதற்கும் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த நபரை டீ குடிக்க அழைத்துச் செல்வதாக கூறி கடத்திச் சென்று வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்து பணத்தை கேட்டு மிரட்டியதாக ஆகாஷ் கொடுத்த கடத்தல் புகாரால் நொளம்பூர் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஸ்டாலினா? பதறும் பாஜக? அம்பலப்படுத்திய இந்தியா டுடே?

MUST READ