spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsஇன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வரும் கூமாப்பட்டி….

இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வரும் கூமாப்பட்டி….

-

- Advertisement -

இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது கூமாப்பட்டி  என்ற கிராமத்தை இளைஞா் ஓருவா் தேசிய அளவில் டிரெண்டாக்கியுள்ளார்.இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வரும் கூமாப்பட்டி….தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஒரு விஷயத்தை டிரெண்டிங் செய்வதில் இளைஞா்கள் பலரும் ஆா்வம் காட்டி வருகின்றனா். அந்த வகையில், social mediaவில் ஒரு பொருளை விளம்பரம் செய்ய இலட்சக்கணக்கில் செலவு செய்பவர்களுக்கு மத்தியில், ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் கூமாப்பட்டி கிராமத்தை ஒரே நாளில் அகில உலக பேமஸ் ஆகிவிட்டாா் ஒரு இளைஞா். சில நாட்களாகவே இன்ஸ்டகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களை திறந்து பாா்த்தாலே, ஏங்க கூமாபட்டிக்கு வாங்க என்ற வீடியோக்கள் தான் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் ஒரு நபா், “யாருக்கேனும் மன அழுத்தமோ, மன உளைச்சலோ இருந்தால் எங்க கூமாப்பட்டி ஊருக்கு வாங்க, இது ஒரு தனி தீவு, ஐலேண்டு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை சார்ந்த இடங்கள் அதிகளவில் உள்ளது என்று பேசியிருப்பாா். அந்த வீடியோவில் கூமாபட்டியை சுற்றியுள்ள இயற்கை வளங்களையும் காட்டியிருப்பாா்.

we-r-hiring

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதன் காரணமாக இளைஞர்கள் பலரும் கூமாபட்டி எங்கே இருக்கிறது, அந்த ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என்று இணையத்தில்  வழி தேட ஆரம்பித்துவிட்டனர். இதனால், கூமாபட்டி என்ற கிராமம் இணைய தேடுதலில் முன்னிலையில் இருந்து வருவதால், அந்த கிராமம் தமிழக அளவில் மிகவும் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில் 20 கி.மீ தொலைவில் இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை அழகு கொஞ்சும் சுற்றுலாத் தளமாகவே இருந்து வந்தது. இந்த கிராமத்தை  வா்ணிக்க வாா்த்தைகளே இல்லை என்றே கூறலாம். இது முழுக்க முழுக்க விவசாய பூமி.

ஆனால், இந்த வீடியோ பழையது என்றும், தற்போது கூமாப்பட்டியில் ஆறுகள் வறண்டு காணப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் சிலரால் கூறப்படுகிறது. மேலும், சிறிய கிராமமான கூமாப்பட்டியில் சுற்றுலா வசதிகள் ஏதும் இல்லை என்றும், சுற்றுலா பயணிகள் நம்பி வந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையே, அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில், இந்த வீடியோவை வைரலாகி வரும் நபர், தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்து ரீல்ஸ் எடுத்து போட்டுள்ளாரா? என்று அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது – செல்வப்பெருந்தகை ஆவேசம்

 

MUST READ