spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தன்னிச்சையானது – ஜனநாயக சங்கங்கள் எதிர்ப்பு

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தன்னிச்சையானது – ஜனநாயக சங்கங்கள் எதிர்ப்பு

-

- Advertisement -

பீகாரில் வாக்காளர் பட்டியலை சிறப்பு திருத்தம் செய்வதற்கான இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஜூலை 10 ஆம் தேதி முதல் விசாரிப்பதாக நீதிபதிகள் உறுதி!தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தன்னிச்சையானது – ஜனநாயக சங்கங்கள் எதிர்ப்புபீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 21ன் கீழ், வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் அனைவரும் தாங்கள் இந்தியர் என்பதை நிரூபிக்க தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் 1987 ஜூலை 1 முதல் 2002 ஆம் ஆண்டிற்குள் பிறந்தவர்கள் மொத்தம் 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

அதில், முக்கியமாக தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளையும் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தன்னிச்சையானது எனவும் வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்க கூடும் என தெரிவித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இம்மனுக்கள் மீதான விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க கோரி இன்று, நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அமர்வில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் முறையீடு செய்தார்.

we-r-hiring

அப்போது, வழக்கை ஜூலை 10 ஆம் தேதி (வரும் வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பல லட்சம் வாக்காளர்கள் முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட உள்ள வழக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குறித்தபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் சீமான் ஆவேசம்…

MUST READ