spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்ச ரூபாய் நிதி-முதல்வர்…

விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்ச ரூபாய் நிதி-முதல்வர்…

-

- Advertisement -

கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், மூன்று மாணவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின கூறியுள்ளாா்.விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்ச ரூபாய் நிதி-முதல்வர்… மேலும், இது குறித்து தனது வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிமிலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, மாண்புமிகு அமைச்சர் MRK பன்னீா் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளாா்.

ஆயிரம் கனவுகளோடு பள்ளிக்கு சென்ற மழலைகளின் மரணம் அறிந்து வேதனை-துணை முதல்வர்

we-r-hiring

MUST READ