spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமுதல் ஆர்ப்பாட்டமே கட்சி காலி! மூன்றே நிமிடத்தில் ஓடிய விஜய்!

முதல் ஆர்ப்பாட்டமே கட்சி காலி! மூன்றே நிமிடத்தில் ஓடிய விஜய்!

-

- Advertisement -

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரியது அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின். ஆனால் தவெக தலைவர் விஜய் இது குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புகிறார் என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

சென்னையில் நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்டம் குறித்தும், அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் திமுக மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்  குறித்தும் வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-  தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஏன் அஜித்குமார் மரணத்துக்கு மட்டும் சாரி கேட்கிறீர்கள். மற்ற 24 பேருக்கு என்ன சொல்வீர்கள் என்று கேட்கிறார். காவல்துறையால் இப்படி ஒரு மரணம் நடைபெற்றுள்ளது. அதற்கு அரசு முழு பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. அதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அஜித்குமார் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் எனக்கும் உடன்பாடு கிடையாது.

இந்த விவகாரத்திற்கு பின்னால் முன்னாள் பாஜக இருக்கிறது. அதனுடைய மாநிலத் தலைவர் வருகிறார் என்கிறபோது, எதற்காக முதலமைச்சர் சிபிஐக்கு மாற்றினார் என கேள்வி எழுப்பினேன். முதலமைச்சரை பொறுத்தவரை இந்த விவகாரத்தில் மடியில் கணமில்லை. வழியில் பயமில்லை என்பதால் அதனால் எதுவாக இருந்தாலும் சந்திப்போம். சிபிசிஐடி, அல்லது தமிழக காவல்துறையோ விசாரித்தால் உண்மையை மூடி மறைத்துவிட்டார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவார்கள். இதற்கு இடம் தரக்கூடாது என்பதால் தான் சிபிஐக்கு மாற்றினார்.

காவல்துறையால் நிகழ்த்தப்படுகிற லாக்அப் மரணங்கள் குறித்து விஜய்க்கு தெரியுமா? அது குறித்த ஏதாவது ஒரு செய்தியை அவர் பேசினாரா? 24 பேர் இறந்து விட்டதாக சொல்கிறாரே விஜய், அவர்களின் பெயர் தெரியுமா அவருக்கு? ஏதோ ஒரு அடையாள ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார். விஜய் வெளியே வர மாட்டாரா? என்று எல்லோரும் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார். தற்போது இவ்வளவு வேகமாக பேசுகிற விஜய், இதற்கு முன்பாக ஏன் இவ்வளவு வேகத்தோடு வெளிப்படவில்லை.

இந்த ஒரு விஷயத்திற்கு தான் அவர் வெளிப்படுகிறார் என்றால்? இதற்கு முன்பு நடந்த எத்தனையோ பிரச்சினைகளை விஜய் பேச தயங்கியதன் காரணம் என்ன? வெளிவருவதற்கு அவர் அச்சப்பட்டதற்கான எண்ணம் என்ன? அப்போது பின்னால் இருந்து இயக்குபவர்கள் இதை நீங்கள் செய்யுங்கள் என்று ஒப்புதல் தந்த பிறகுதான், விஜய் வீதிக்கு போராட வந்துள்ளார் என்றுதான் புரிந்துகொள்கிறேன். மொத்தத்தில் திமுக அரசை குறைசொல்வதாக இருந்தால் வேகமாக வருகிறார் விஜய்.

அஜித்குமார் வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கிறது. அது லாக்அப் மரணம் குறித்து விசாரிக்கவும், நிகிதா மீதான புகார்கள் விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதனை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசின் காவல்துறை விசாரணையை எடுக்கின்றனர். ஒரு அரசு சட்டத்தின் படி நீதிமன்றத்தின் முன்பு கட்டுப்பட்டு நிற்க வேண்டுமா? அல்லது  நீதிமன்றம் இதில் வரக்கூடாது என்று தடைவிதிக்க முடியுமா? இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் பேசுகிறார் விஜய். விஜய்க்கு இந்த விஷயத்தில் போதிய அளவு புரிதல் கிடையாது. அப்படி இருந்தால் அவர் இந்த அளவுக்கு பேசி இருக்க மாட்டார். என்ன சொல்லி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பது என்று விஜய்க்கு தெரியவில்லை. அதனால்தான் 4 நிமிடங்களுக்கும் குறைவாக பேசுகிறார். அவருக்கு அரசியலும் தெரியவில்லை. சட்டமும் தெரிய வில்லை.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டவர் யார்?,  வேண்டாம் என்று சொன்னது யார்?  என்று விஜய்க்கு தெரியுமா? அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர். இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். எந்த கோரிக்கையை அன்றைக்கு மு.க.ஸ்டாலின் வைத்தாரோ, அதற்கு மாறாக பேசினார் என்று விஜய் உண்மைக்கு புறம்பாக சொல்கிறார். இது எவ்வளவு பெரிய தவறு, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ