பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முக்கிய கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் கோவை நகரில் உருவாகி வரும் முக்கியமான பொது பயன்பாட்டு கட்டடங்களை தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு அவர்கள் நேரில் பார்வையிட்டார். பரம்பிக்குளம் ஆழியார் திட்ட வளாகம், பொள்ளாச்சியில் மொத்தம் ரூ.428.71 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் இந்த திட்டம், பெருந்தலைவர்கள் க.காமராஜர், சி.சுப்பிரமணியம், நா. மகாலிங்கம் மற்றும் வி.கே. பழனிச்சாமிகவுண்டர் ஆகியோரின் முழு திருவுருவ சிலைகளுடன், விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் கருத்தரங்க கூடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 300 பேர் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம், கண்காட்சி அரங்கம், விவசாய பயிற்சி வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வளாகம் “சி.சுப்பிரமணியம் வளாகம்” என அழைக்கப்படுகிறது. மாநாட்டு அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கங்கள் முறையே “வி.கே. பழனிச்சாமி அரங்கம்”, “நா.மகாலிங்கம் அரங்கம்” என பெயரிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் 2024-25 நிதிநிலை அறிக்கையின் கீழ் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கோவையில் நடைபெறும் இந்த மாபெரும் நூலகத் திட்டமும் அமைச்சர் பார்வையிட்டார். அனுப்பர்பாளையம் கிராமத்தில் உள்ள 6.98 ஏக்கர் நிலத்தில் உருவாகும் இந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 1.98 லட்சம் சதுர அடி. இதில், கலையரங்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான நூலகம், குழந்தைகள், போட்டித்தேர்வு மற்றும் தமிழ் நூலகங்கள் டிஜிட்டல் நூலகம், அறிவியல் மையம் 90,000+ புத்தகங்கள், பன்முயற்சி மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் முதலியன அனைத்தும் அடங்கும்.
தற்போது பூச்சுப் பணி, செங்கல் கட்டுமானம், மேற்கூரை அமைப்பு போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2025 டிசம்பர் இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர் அவர்கள், மேற்கொண்டும் கட்டுமான பணிகள் தரமான முறையில், தகுந்த நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தாய், தந்தையர்க்கு இணையாக பாசம் காட்டிய அண்ணனை இழந்து விட்டேன்-முதல்வர் வருத்தம்…