spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வரின் நேரடி தலையீடு வேண்டும்… டி.எஸ்.பி சுந்தரேசன் கோரிக்கை

முதல்வரின் நேரடி தலையீடு வேண்டும்… டி.எஸ்.பி சுந்தரேசன் கோரிக்கை

-

- Advertisement -

மயிலாடுதுறையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் விளக்கம் அளித்துள்ளாா். மேலும் முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் எனவும் பேட்டியளித்துள்ளாா்.முதல்வரின் நேரடி தலையீடு வேண்டும்… டி.எஸ்.பி சுந்தரேசன் கோரிக்கைமயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இன்று வீட்டிலிருந்து புறப்பட்டபோது, அவரை வழிமறித்து டிஎஸ்பி சுந்தரேசன் மீது வெளியிடப்பட்டுள்ள குற்றசாட்டுகள் குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில்,

“என் மீது முந்தைய காலங்களில் நடந்த பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அப்போது நான் தவறு செய்து இருந்தால் என்னை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை transfer செய்கிறார்கள். பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளானால் போலீசார் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். ஆனால் என்மீது பாலியல் குற்றசாட்டு சுமத்தியுள்ள போலீஸ் அதிகாரிகள் ஏன் பணிநீக்கம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

we-r-hiring

காவல்துறைக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கைப்பட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் . இதுதான் காவலர்களின் நிலை. ஒரு வருடத்திற்கும் ஒரு ஊதிய உயர்வு உண்டு. எனது ஒன்பது மாத ஊதிய உயர்வை தடுக்கின்றனர். நான் நேர்மையான அதிகாரி. பல பிரச்சினைகளை சந்தித்துள்ளேன்.  போலீசார் நேர்மையான அதிகாரிகளை பணிசெய்ய விடமாட்டார்கள் குற்றச்சாட்டுகளை வைக்கத்தான் செய்வார்கள். என் மீது பாலியல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். ஆனால் தற்போது வரை ஏன் என்னை சஸ்பெண்ட் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.

கடந்த 11 மாதமாக இரவு பகலாக நேர்மையாக வேலை செய்து வருகிறேன். தன்னை விசாரிக்காமல் எப்படி டிஐஜி சஸ்பென்ட் செய்ய பரிந்துரைக்கலாம். நான் அனைத்திற்கும் தயாராக உள்ளேன். மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தவறான தகவல் என்று அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதிலை கூறுகிறார். உங்களால் ஏன் பதில் சொல்லமுடியவில்லை. நான் ஓடி ஒளியவில்லை. நான் பதில் சொல்கிறேன். எனது தந்தைக்கு சென்னையில் ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. இந்த செய்திகளைய பார்த்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது தொடர்பான மெசேஜ் மாவட்ட எஸ்பி இடம் தெரிவித்துள்ளேன். ஆனால் அவர் தற்போது வரை எனக்கு பதில் அளிக்கவில்லை. நான் குடும்பத்துடன் சென்னை சென்று எனது தந்தையை பார்க்க வேண்டும்.

இது தொடர்பான பிரச்சனை டி.ஐ.ஜி.க்கு தெரியும். ஆனால் தற்போது வரை என்னை விசாரிக்கவில்லை. 11 மாதம் நான் பணி செய்து வருகிறேன். ஆனால் இதுவரை என்னைப் பற்றி யாரும் புகார் அளிக்கவில்லை. டி.எஸ்.பி விஷ்ணுபிரியா நாமக்கல்லில் மறைந்தார். அந்த வழக்கை விசாரணை செய்ததில் நானும் ஒரு காவலராக இருந்தேன். அடுத்து விஜயகுமார் ஐ.பி.எஸ் இறந்தார். அவரிடம் நான் வேலை செய்ததில்லை. ஆனால் அவர் தங்கம் என தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் ஏன் இன்னும் எனது பிரச்சனையில் தலையிடவில்லை என எனக்கு தெரியவில்லை.

தமிழக முதல்வர் தன்பிரச்சனையில் நேரிடையாக தலையிட வேண்டும்.  தமிழக டி.ஜி.பி ஏன் என்னை அழைத்து இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவில்லை. காஞ்சிபுரம் வழக்கில் குற்றவாளி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் மீது தவறு இருப்பதாக சுட்டிக் காட்டினேன் அதிலிருந்து எனக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது.  நான் காவல்துறையில் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சில பேரின் சுயநலத்தால் தான் எங்களை போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் தேவை நான் காவல்துறையில் பணியாற்ற கூடாது. எனக்கும் சட்டம் தெரியும். தற்போது நான் பேசுவதால் என்ன விளைவுகள் வரும் என்று எனக்கு தெரியும். என் மீது சேற்றை வாரி அடிக்கிறார்கள்.

எனது தந்தை உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார். அப்போதும் நான் இங்கு நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன். என் மீது தவறு இருந்தால் தூக்கில் போடவும். காவல்துறையில் ஸ்டார் முக்கியமில்லை. மன நிம்மதி மட்டுமே முக்கியம். எனது குடும்பத்திற்கு யார் பாதுகாப்பு. நான் இறந்துவிட்டால் மலர் வளையம் வைத்துவிட்டு கண்ணீர் விட்டு சென்றுவிடுவீர்கள். ஆனால் நான் கடைசிவரை பிரச்சினைகளை சந்திப்பேன். மற்ற காவலர்களை போன்று எவ்வித தவறான முடிவும் எடுக்க மாட்டேன். டிஜிபி சங்கர் ஜிவால் நல்ல அதிகாரி. ஆனால் தற்போது வரை தன்னை கூப்பிட்டு விசாரிக்கவில்லை. மீண்டும் பதிவு செய்கிறேன். எனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை. தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக எனது பிரச்சனையில் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.

ஒரு போட்டி 5 நிமிடம் மட்டுமே…கோடி கணக்கில் பந்தயம்…கண்டுகொள்ளாத காவல்துறை

MUST READ