spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவமனையில் இருந்த படியே பணிகளை மேற்கொண்டார் முதல்வர்!!

மருத்துவமனையில் இருந்த படியே பணிகளை மேற்கொண்டார் முதல்வர்!!

-

- Advertisement -

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அவா் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.மருத்துவமனையில் இருந்த படியே பணிகளை மேற்கொண்டாா் முதல்வர்!!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல், வழக்கம் போல் காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு தி.மு.க.வில் இணைய வந்திருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவை இன்முகத்துடன் வரவேற்றார். அதன் பிறகு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவாலயம் வந்திருந்தார். அவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் கொளத்தூர் தொகுதியில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டதால், அப்பல்லோ மருத்துவமனைக்கு  சென்ற அவருக்கு மருத்துவா்கள் நேற்று காலை 10.40 மணியளவில் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். பயப்படும் அளவிற்கு பெரியளவில்  பிரச்சனை என்ற மருத்துவா்கள் 2 நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்று தெரிவித்தனர். இதனால் முதலமைச்சரின் நேற்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதுடன் திருப்பூர், கோவை செல்ல இருந்த பயணமும் ஒத்தி வைக்கப்பட்டது.

we-r-hiring

மேலும், அரசுப் பணிகள் குறித்து மருத்துவமனையில் இருந்த படியே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணி குறித்து தலைமைச் செயலாளருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என முதலமைச்சா் அறிவுறுத்தி உள்ளார்.

அரசு பேருந்துக் கட்டணம் உயர்வு குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

MUST READ