spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தனது 2 குழந்தைகளையே கொன்ற கொடூர தாய்! நீதிபதி அதிரடி தீர்ப்பு…

தனது 2 குழந்தைகளையே கொன்ற கொடூர தாய்! நீதிபதி அதிரடி தீர்ப்பு…

-

- Advertisement -

2018  ஆம் ஆண்டு தனது குழந்தைகளையே கொன்ற வழக்கில் அபிராமி கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அவருக்கு தீா்ப்பு வழங்கப்பட்டது.தனது 2 குழந்தைகளையே கொன்ற கொடூர தாய்! நீதிபதி அதிரடி தீர்ப்பு…2018  ஆம் ஆண்டு தனது இரண்டு குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற துயர சம்பவம் அரங்கேறியது. அந்த கொடூர செயலை செய்தது அவரது தாயே என்பது தான் மேலும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. அபிராமி என்ற பெண்ணுக்கும்  அதே பகுதியில் பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரம்  என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டிருந்தது. கள்ளக்காதலுக்கு தனது குழந்தைகளான அஜய்(6) மற்றும் கார்னிகா (4) ஆகியோா் இடையூறாக இருப்பதால், அளவுக்கு அதிகமாக குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொன்றாா்.தனது 2 குழந்தைகளையே கொன்ற கொடூர தாய்! நீதிபதி அதிரடி தீர்ப்பு…இந்த கொலை வழக்கில் அபிராமி, கள்ளக் காதலன் மீனாட்சிசுந்தரம் ஆகிய இருவரும் கைதாகினர். திருமணத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் இன்று காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருமணத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமி, கள்ளக் காதலன் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தனது 2 குழந்தைகளையே கொன்ற கொடூர தாய்! நீதிபதி அதிரடி தீர்ப்பு…இருவரும் தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதி செம்மல் தெரிவித்துள்ளார். மேலும், திருமண பந்தத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமியை தூக்கிலிட முடியாது. தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் நீதிபதி செம்மல் உத்தரவிட்டுள்ளார். இத்தீர்ப்பு இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமா, எடப்பாடி ஏமாளி தான்! அமித்ஷாவின் பிளானை சொல்லவா? தராசு ஷ்யாம் நேர்காணல்! 

MUST READ