spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஆமா, எடப்பாடி ஏமாளி தான்! அமித்ஷாவின் பிளானை சொல்லவா? தராசு ஷ்யாம் நேர்காணல்! 

ஆமா, எடப்பாடி ஏமாளி தான்! அமித்ஷாவின் பிளானை சொல்லவா? தராசு ஷ்யாம் நேர்காணல்! 

-

- Advertisement -

எடப்பாடி பழனிசாமி கட்டாயத்தின் பேரில் பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில், மற்றவர்களை திமுக எதிர்ப்பு என்கிற பெயரில் கூட்டணிக்கு அழைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

tharasu shyam
tharasu shyam

அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகி அன்வர் ராஜா விலகியுள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அன்வர் ராஜா, என்னுடைய சம கால தோழர். மாணவப் பருவத்தில் நாங்கள் இருவரும் திமுகவில் இருந்தோம். 1967ல் திமுக ஆட்சிக்கு வந்தது. நடுவில் இந்திரா காந்திக்கு கலைஞர் ஆதரிவு தெரிவித்ததால் நான் வெளியேறிவிட்டேன். ஆனால் அன்வர் ராஜா திமுகவில் தொடர்ந்தார். அவருடைய சொந்த மாவட்டமா ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் செல்வாக்கு மிக்கதாகும். குறிபிட்ட சமூகம் ஆதிக்கம் செலுத்துகிற அரசியல் அங்கே இருந்தது. 1972ல் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கியபோது அன்வர்ராஜா திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். அதன் பிறகு அன்வர் ராஜா அடைந்த வளர்ச்சி என்பது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் ஆதரவால்தான். முழுக்க முழுக்க அவர் எம்ஜிஆர் தொண்டனாக தான் இருந்தார். உள்ளாட்சி அமைப்புகளில் தான் அவர் பெரிய அளவுக்கு பயணம் செய்தார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், 5 ஆண்டுகள் பிரச்சினையே இல்லாமல் இருந்த அமைச்சர்களில் அவரும் ஒருவர். ஜெயலலிதா மறைக்கு பின்னர் ஜுனியரான எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்ததில், சீனியர்களுக்கு சற்று மனத்தாங்கல் இருந்தது. அவர்கள் சசிகலாவை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தனர். தனக்கு நெருக்கமான சசிகலா, அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும் என்று அன்வர் ராஜா விரும்பினார். அவர் பொதுவெளியிலேயே சொன்னார். இதனால் 2017 முதல் எடப்பாடிக்கு, அன்வர் ராஜா மீது அதிருப்தி இருந்தது.

we-r-hiring

பாஜகாவுடன் கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி…

2021ல் அவரை கட்சியை விட்டே நீக்கினார்கள். எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியை முறித்த உடன் அதிமுகவில் மீண்டும் இணைந்துகொண்டார். அவரை அதிமுக அமைப்பு செயலாளராக நியமித்தார்கள். அதிமுகவின் இஸ்லாமிய முகமாக அன்வர் ராஜா, தமிழ்மகன் உசேன் ஆகியோர் இருந்தனர். அன்வர் ராஜாவுக்கு அடுத்த படியாக பாஜக கூட்டணியை விரும்பாதவர்கள் பட்டியலில் தமிழ்மகன் உசேனும் இருக்கிறார். பாஜகவின் அணுகுமுறை என்பது, தங்களுடைய கூட்டணி கட்சிகளை அழித்து, ஒழித்துதான் அவர்களின் இடத்தை பிடித்திருக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணி என்பது நாளடைவில் அதிமுகவின் அழிவை நோக்கி போகிறது என்று நான் உள்பட பலர் நினைக்கிறோம். அன்வர் ராஜாவும் அப்படிதான் நினைக்கிறார். அந்த பேட்டிக்கு பிறகு என்னிடம் தொலைபேசியில் பேசினார். அதிமுகவின் நிலைமை இப்படி இருக்கிறதே. பேசாமல் அரசியலில் இருந்து விலகிவிடலாமா என்று நினைக்கிறேன் என்று சொன்னார். அப்போது அரசியலில் இருந்து ஓய்வுபெற முடியாது. அதனால் மாற்று முகாம்தான் நீங்கள் போக வேண்டும் என்று சொன்னார். விஜயிடம் போக முடியுமா? என்றால் அவர் மிகவும் ஜுனியர். திமுகவை விட்டு வேறு போக்கு இல்லை. ஏன் திமுகவில் இருந்து காங்கிரசுக்கு போன எங்கள் தரப்பினரே மீண்டும் எம்ஜிஆரிடம் வந்துவிட்டது.

eps

காமராஜர் திமுக, அதிமுகவை இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொன்னார். ஒரு வகையில் அது பொருத்தம்தான். ஏனென்றால் எல்லாம் திராவிட குட்டைதான். இரண்டும் ஒரு மரத்தின் இரண்டு பகுதிகள் ஆகும். இரு கட்சிகளுக்கும் அடிப்படை கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது. அதிமுக என்கிற கட்சி தேய்மானத்தை நோக்கி செல்கிறதா? என்றால் தெரியவில்லை. பாஜக கூட்டணியுடன் செல்கிறபோது, உண்மையில் அது யோசனையாக தான் இருக்கிறது. என்ன காரணம் என்றால் பாஜக 25 இடங்களில் 15ல் வெற்றி பெற்றால் கூட உங்களுக்கு ஆபத்துதான். பாஜக 4 தொகுதிகளுக்கு மேல் ஒன்று ஜெயித்தால் கூட அதிமுகவுக்கு தொல்லைதான். திருப்பி அதை வைத்துதான் அவர்கள் முயற்சி செய்வார்கள். தமிழ்நாட்டினுடைய அரசியல் என்பது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியது. அதனால் அண்ணா மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்று சொல்கிறார். மத்திய ஆட்சியில் அதிமுக, திமுக பங்கேற்றாலும், மாநில அரசில் பங்கு தர மாட்டார்கள். ஏனென்றால் மாநிலத்தில் சுயாட்சியாகும்.

EPS - ஈபிஎஸ்

தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டு மக்கள் ஒரு கட்சியின் ஆட்சியை தான் விரும்புவார்கள். அதுதான் அதிமுகவின் கொள்கையும். தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும் என்று சொல்லியுள்ளார். அதிமுக, 1998ல் பாஜக உடன் கூட்டணி வைத்தது. 1999ல் திமுக உடன் பாஜககூட்டணி வைத்தது. 2001ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்துவிட்டது. 2004ல் மக்களவை தேர்தலில் ஜெயலலிதா பாஜக உடன் கூட்டணி வைத்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் யாராவது பாஜக உடன் கூட்டணி வைக்கும் முயற்சி எடுத்தார்களா? ஒரு சதவீதம் உள்ள கட்சியை யாராவது கூட்டணியில் சேர்த்திருப்பார்கள் அல்லவா? 2006, 2009, 2011, 2014, 2016 தேர்தல்களில் பாஜக உடன் திமுக, அதிமுக கூட்டணி வைக்கவில்லை. அதற்கு காரணமாக இங்கு அது சரிபட்டு வராது என்று தலைவர்களுக்கு புரிந்துவிட்டது.  அதிமுக – பாஜக கூட்டணியால் அதிமுக நஷ்டப்பட்ரும். அது பற்றி உங்களுக்கு என்ன கவலை என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்? நமக்கு தான் கவலை. அதெப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?. நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நாம் அவர்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.

அதிமுக முடிவு

நமக்கு எச்சரிக்கை விடுப்பதற்கான உரிமை இருக்கிறதா? இல்லையா? இபிஎஸ்-ஐ விட நான் சீனியர். எனக்கு எச்சரிக்கை விடுக்க எல்லா உரிமைகளும் உள்ளன. அதிமுக சட்டவிதிகள் எழுதப்படுகிறபோது வாசலில் நின்று கொண்டிருந்தவன் நான். எம்ஜிஆர் பத்திரிகையில் பணிபுரிந்தவன். என்னுடைய போயஸ் காடன் கால கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியே எனக்கு தெரியாது. ஓபிஎஸ்தான் வெளியே உட்கார்ந்து இருப்பார். எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் அதிமுக கொள்கைகளை பின்பற்றுகிறார் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அடிப்படையான 5 விஷயங்களில் திமுகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல. இதை யார் சொன்னார் என்றால் எம்.ஜி.ஆர். அதிமுகவும் – திமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று சட்டமன்றத்தில் சொன்னார். அதற்கான பதிவுகளும் இருக்கிறது. இந்த 5 விஷயங்களில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பதுதான் கேள்வி. இதில் கொள்கை, கூட்டணி என்பதே கிடையாது. இது கூட்டணி, கொள்கை சம்பந்தப்பட்டதே கிடையாது. தமிழ்நாட்டின் உருவாக்கம். அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் என மூன்று பேரும் ஒப்புக்கொண்ட விஷயத்தில் பாஜக மாறுபடுவதோடு அல்லாமல் குறைந்தட்ச செயல்திட்டம் கொண்டுவந்து நாங்கள் அதை வலியுறுத்துவோம் என்று சொல்கிறார் ராஜா. அவர் ஒன்றும் பின்வாங்கி எல்லாம் சொல்லவில்லை. அவர் தெளிவாக தான் சொல்கிறார்.

ஜுனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் குறைந்தபட்ச செயல் திட்டம் கொண்டுவர வலியுறுத்துவோம் என்கிறார்.இந்த இடம்தான் அடிப்படையில் ஏற்படுகிற வித்தியாசம். எடப்பாடி பழனிசாமி கூட்டணியை முறிக்க பார்க்கிறார்கள் என்கிறார். உங்களுடைய கூட்டணியை யாரும் முறிக்க பார்க்கிறார்கள். பாஜக தனியாக நிற்க வேண்டும் அவ்வளவுதான். பாஜக தனியாக நின்றால் ஒன்றுமே இருக்காது. ஒரு மாநிலத் தலைவரை பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து வளர்த்துவிட்டனர். அண்ணாமலை வலதுசாரி இயக்கத்தை பெரிய அளவுக்கு கொண்டுவந்த அண்ணாமலையை பாஜக எப்படி தியாகம் செய்தது. அப்போது அதற்கு அதைவிட பெரிய இலக்கு உள்ளது என்றுதானே அர்த்தம். அதிமுக கடந்த முறை வாங்கிய சீட்டுகளை வாங்கினாலோ, அல்லது கூடுதலான சீட்டுகளை வாங்கினாலோ யாருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் பாஜக இரட்டை இலக்கத்தில் வாங்கினால் அது ஆபத்து. ஏனென்றால் பல மாநிலங்களில் அது பார்த்ததுதான்.

நாம் தமிழ்நாட்டின் அடையாளத்தை காப்பாற்றி கொள்வதற்காக இந்த விஷயத்தை சொல்கிறோம். மகராஷ்டிராவும் இன்றைக்கு அதைதான் சொல்கிறது. தமிழ்தேசிய என்பதற்கும் அதுதான் அர்த்தம். விஜயை கூப்பிடுகிறார். அவருக்கு அடுத்தபடியாக தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் வேண்டாமா? அதை வாங்குவதற்கே நீங்கள் நிறைய இடங்களில் நிற்க வேண்டி வருமே. நின்னால்தானே அங்கீகாரம் வரும். பிறகு எப்படி அதிமுக கூட்டணிக்கு வருவார்? திமுகவை எதிர்க்க வேண்டும். ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருக்கிறார். அதற்கு எப்படி மற்ற கட்சிகளை துணை அழைக்கிறார் என்றால்? திமுக எதிர்ப்பு என்கிற போர்வையில் துணைக்கு அழைக்கிறார். அதற்கு வாய்ப்பே கிடையாது. அப்படி நடக்க வேண்டும் என்றால் பெரிய ஏமாளியாக விஜய் இருக்க வேண்டும். மிகப்பெரிய ஏமாளியாக சீமான் இருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ