திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றிய போதும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்று அதிருப்தியை தெரிவித்த உயர்நீதி மன்றம்.களாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனுஷ் தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், தனுஷின் சகோதரரான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக அவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். பின்னர், போலீசாரின் விசாரணையில், இந்தக் கடத்தலில் தொழிலதிபர் வனராஜா, முன்னாள் உதவி ஆய்வாளர் மகேஸ்வரி, வழக்கறிஞர் சரத்குமார் உள்ளிட்டோர் தொடர்புடையதாக கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமின் பெயரும் வெளியானது.
இதனையடுத்து, பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டியது, இந்நிலையில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. அதே சமயத்தில், ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் கைதும் செய்யப்பட்டார். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது, பின்னர் காவல் நிலைய ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த கடத்தல் வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், திருவள்ளூர் சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “அரசு வாகனம் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கு சிறுவன் கடத்தல் வழக்கு ஒரு உதாரணம். கடத்தல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய போதும் விசாரணையில் முன்னேற்றம் இல்லை. காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் கைதான வனராஜ், மணிகண்டன், கணேசன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்கிறோம், “இவ்வாறு தெரிவித்தனர்.
சுற்றுச்சூழல் துறையில் மறுமலர்ச்சி – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்