spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவின் மிகப்பெரிய ஏற்றமே திமுகவிற்கு ஏமாற்றமாகும் – வைகை செல்வன் ஆவேசம்

அதிமுகவின் மிகப்பெரிய ஏற்றமே திமுகவிற்கு ஏமாற்றமாகும் – வைகை செல்வன் ஆவேசம்

-

- Advertisement -

கூட்டணிக்கு தவெக, நாம் தமிழர் வருமா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் இருப்போம் நிச்சயம் மாற்றம் வரும் அதிமுகவிற்கு மிகப்பெரிய ஏற்றம் வரும் திமுகவிற்கு ஏமாற்றமாகும். திருநின்றவூர் நகராட்சி மற்றும் திமுக அரசை கண்டித்து திருநின்றவூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேட்டி அளித்துள்ளாா்.அதிமுகவின் மிகப்பெரிய ஏற்றமே திமுகவிற்கு ஏமாற்றமாகும் – வைகை செல்வன் ஆவேசம்திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர் நகராட்சியின் செயல்படாத நிலையை கண்டித்தும்,எந்த வித மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத அதிகாரிகளை மற்றும் திமுக அரசை கண்டித்தும் திருநின்றவூர் நகர அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருநின்றவூர் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இதில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்தையும்,திமுகவையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்பாட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் போராட்டத்தில் உரையாற்றிய வைகைசெல்வன்அதிமுகவின் மிகப்பெரிய ஏற்றமே திமுகவிற்கு ஏமாற்றமாகும் – வைகை செல்வன் ஆவேசம்திரைப்படத்திற்கு வில்லன் நாசர் போன்று, ஆவடிக்கு வில்லன் அமைச்சர் நாசர் என விமர்சித்தார்.மேலும் திராவிட மாடல் என்றால் என்ன என்று அமைச்சர் நாசர் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால்விடுத்தார். கம்யூனிஸ்டுகள் திமுகவுடன் பணம் பெற்றுக் கொண்டு அறிவாலய வாசலில் படுத்துக்கொண்டு இருக்கின்றன என கூறினார். மேலும் விசிக, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சிகளும் மக்களுக்காக நிற்கவில்லை அதிமுகவும் பாஜகவும் தான் மக்களுக்காக களத்தில் நின்று போராடி வருவதாக தெரிவித்தார்.

we-r-hiring

 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 34 தொகுதிக்கும் மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார் மிக எழுச்சியாக உள்ளது. நிச்சயமாக இன்னும் எட்டு மாதத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும். அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என வைகைசெல்வன் பேசினார். தொடர்ந்து பேசுகையில், மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் நான் நலமுடன் இருக்கிறேன் என்பதை காட்ட இப்பொழுது அங்கிருந்து பணி செய்வது போல காட்டுகிறார்கள். நலமுடன் இருக்கும் போது எதுவும் செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டிய நேரத்தில் வேலை செய்கிறார் என விமர்சனம் செய்தார்.அதிமுகவின் மிகப்பெரிய ஏற்றமே திமுகவிற்கு ஏமாற்றமாகும் – வைகை செல்வன் ஆவேசம்தவெக, நாம் தமிழர் கட்சிகள் கூட்டணி அழைப்பை நிராகரித்து விட்டன என்ற கேள்விக்கு, 7 முறை ஆட்சி செய்த கட்சி, தற்போது எதிர்க்கட்சி, வலுவான கட்சி அப்படி இருக்கும் போது மற்ற கட்சிகள் தான் எங்களை தேடி வர வேண்டும், வருவார்கள் என பேசியவர் பொது எதிரியாக இருக்க கூடிய திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் அனைவரும் ஓரணியில் இருந்தால் அவர்களை வீழ்த்திவிடலாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை புரிந்து கொண்டு கூட்டணிக்கட்சிகள் கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

கூட்டணிக்கு தவெக,நாம் தமிழர் வருமா என்ற கேள்விக்கு, நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் இருப்போம் இன்னும் 8 மாதங்கள் உள்ளது மாற்றங்கள் நடக்கும் எனவும் அதிமுக ஏற்றம் பெறும் இது திமுவிற்கு ஏமாற்றமாக இருக்கும் என கூறினார். தமிழகம் வரும் பிரதமரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து சில பல காரியங்கள் குறித்து பேச உள்ளார். NDA கூட்டணிக்கு தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் தலைவர், முதல்வர் வேட்பாளர் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று தெளிவுப்படுத்தினார்.

லுங்கியில் முதல்வர்! கதறும் சங்கி கூட்டம்! கோட்டை விட்ட எடப்பாடி!

MUST READ