வேலியே பயிரை மேய்ந்த கதையாக உடன் வந்த நண்பனே ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முக்தியார் (வயது32) என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த நூருதீன் என்பவர் முக்தியார் நடத்தி வந்த ஓட்டலுக்கு சென்று வரும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்தநிலையில் ஹோட்டல் உரிமையாளர் முக்தியார் நண்பர் நூருதீனை அழைத்துக் கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூருக்கு ஹோட்டலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளார். அங்கு ஓட்டலுக்கு தேவையான எந்த பொருளும் கிடைக்காத நிலையில் மீண்டும் ஊர் திரும்பி உள்ளார். முக்தியார் வைத்திருந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக தன் அண்ணன் மற்றும் நண்பர்களை வைத்து திட்டம் தீட்திருந்த நூருதீன் தன் அண்ணன் முகமது பாஷா மற்றும் ராமமூர்த்திக்கும் தாங்கள் பணத்துடன் வருவதை தகவல் தெரிவித்துள்ளான்.

நூருதீன் தொடர்ந்து தங்கள் வரும் இடத்தை குறித்து தகவலை செல்போன் மூலம் தெரிவித்து வந்துள்ளான். பரதராமி மதுவிலக்கு சோதனை சாவடி அருகில் வரும் போது முக்தியார் கையில் வைத்திருந்த பணப்பையை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பிடுங்கி செல்வது போல் நூருதீன் அண்ணன் மற்றும் நண்பர்கள் பிடுங்கி சென்றுள்ளனர். முக்தியாரும் அருகே இருந்த பரதராமி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, பரதராமி போலீசார் இந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது முக்தியாரிடம் பணப்பை பிடுங்கிச் சென்றவர்கள் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் நூருதீனிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் நூருதீன் பணத்தை கொள்ளை அடிக்க தனது அண்ணன் முகமது பாஷா ராமமூர்த்தி பேரரசு பழனி உள்ளிட்டவர்களின் உதவியோடு பணத்தை வழிப்பறி செய்ய இதற்கு முன்பாகவே திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்ததும் போலீசாா் நூருதீனை கைது செய்து இவருக்கு உதவியாக இருந்து தலைமறைவான 4பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பனே பல நாட்களாக திட்டம் தீட்டி அண்ணன் மற்றும் நண்பர்களை வைத்து இரண்டு 2.50 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் மிகப்பெரிய ஏற்றமே திமுகவிற்கு ஏமாற்றமாகும் – வைகை செல்வன் ஆவேசம்