TCS ஆள் குறைப்புக்கு ஏ.ஐ காரணமல்ல டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரித்திவாசன் விளக்கமளித்துள்ளாா்.
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உள்ளது. அடுத்த ஓராண்டில் தனது பணியாளர்களில் சுமார் 12,000 பேரை ஆள்குறைப்பு செய்வதாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த அறிவிப்பானது ஐடி துறையில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த பணிநீக்க திட்டம், 2026ஆம் நிதியாண்டில் (அதாவது ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை) படிப்படியாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரித்திவாசன், AI வழங்கும் 20 சதவீதம் கூடுதல் உற்பத்தித் திறன் இதற்கு காரணமல்ல. டி.சி.எஸ் நிறுவனத்தை மேலும் துரிதமாக செயல்பட வைக்கவும், எதிர்காலத் தேவைகளுக்கேற்ப மாற்றம் அடையும் வகையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
மேலும், எங்களுக்கு சரியான திறன்கள் கொண்ட பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அவர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. “முன்னேற்றம் காண விரும்பும் திறமையுள்ள நபர்களுக்கு எப்போதும் வாய்ப்புகள் வழங்கப்படும். நாங்கள் திறமையை மதிப்போம்; திறமையின் அடிப்படையிலேயே நியமனங்கள் நடக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த பின்னணியில், TCS ஆள்குறைப்புக்கு AI காரணம் என பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனத் தாங்கள் வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளாா்.