spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்குறைந்தபட்ச அரசியல் பக்குவம் கூட வைகோவிற்கு இல்லை - மல்லை சத்யா

குறைந்தபட்ச அரசியல் பக்குவம் கூட வைகோவிற்கு இல்லை – மல்லை சத்யா

-

- Advertisement -

துரை வைகோ விற்காக தலைவர் வைகோவுடன் நெருக்கமானவர்கள் கட்சியில் ஓரம் கட்டப்படுகிறார்கள். இப்போது வரை மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தான் இருக்கிறேன். நானும் நீங்கவில்லை அவர்களும் என்னை நீக்கவில்லை என மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, குற்றஞ்சாட்டியுள்ளாா்.குறைந்தபட்ச அரசியல் பக்குவம் கூட வைகோவிற்கு இல்லை - மல்லை சத்யா மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில் உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மல்லை சத்யா தெரிவித்திருந்தார். இந்த  நிலையில் தற்போது சென்னை தீவுத்திடல் அருகே உள்ள சிவானந்தா சாலையில்  உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தி வருகிறார். முன்னதாக சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர்,

செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா,

we-r-hiring

இப்படிப்பட்ட ஒரு நிலைமை வரும் என்று கனவிலும் கருதவில்லை. 32 ஆண்டுகால மதிமுக பயணத்தில் கரும்புள்ளியாக கடந்த ஒன்பதாம் தேதி தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா எப்படி துரோகம் செய்தாரோ அதேபோன்று மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்தார் என்று பொதுவெளியில் பேசிய காரணத்தால், அதன் பின்பு  நிலைமைகள் நீதி கேட்பதற்காக இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வோம். ஜனநாயகம் என்பது மக்களுக்காக உருவாக்கப்பட வேண்டும். உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாத்திட வேண்டும் அந்த உற்ற நோக்கத்தில் தான் இன்றைக்கு சிவானந்த சாலையில் எங்களை வருத்திக்கொண்டு உண்ணா நிலை அரப்போராட்டத்தை மக்கள் மன்றத்தில் நீதி கேட்பதற்காக நின்று கொண்டிருக்கிறோம். 32 ஆண்டுகள் மதிமுக பயணத்தில் தமிழ்நாட்டின் ஜீவாதாரண உரிமைகளுக்காக தலைவர் வைகோ தலைமையில் அவர் செல்ல முடியாத இடங்களில் நாங்களும் சென்று பல போராட்டங்களை சந்தித்து ஏறக்குறைய 32 வழக்கு பாஸ்போர்ட் முடக்கம் ஆண்டுக்கு 50,000 கிலோ மீட்டர் நெடும்பயணம், ஆண்டுதோறும் என்னுடைய பயணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தலைவர் வைகோ,  துறை அரசியல் பிரவேசத்திற்கு பின்னால் தலைவர் வைகோவிற்கு நெருக்கமானவர்கள் புறக்கணி போடுவதும் அவமானப்படுத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

தொண்டர்களால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்கள் பார்த்திபன்,  செல்வ பாண்டியன் உள்ளிட்டோர் முன்னறிவிப்பு இல்லாமல் தூக்கு தண்டனையில் உள்ளவர்கள் கூட கடைசி ஆசை கேட்பார்கள் அப்படி இல்லாத நிலைமை மதிமுகவில் இருக்கிறது. இது குறித்து வைக்கவிடும் கேட்பதற்காக அலைபேசியில் அழைத்தால் துரை சொன்னால்தான் அவர் யாரிடமும் பேசுவார் என்று சொல்கிறார்கள். 32 ஆண்டுகள் அரசியல் பயணத்தில் அபாண்டமான துரோகபடி சுமத்தி நாட்டு மக்களிடம் நீதி கேட்பதற்காக அறப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம் மதிமுக எந்தெந்த லட்சியங்களுக்காக போராடியதோ அந்த காலத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். துரை அவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான் எங்கள் அன்பு தலைவர் வைகோ அவர்களை நாங்கள் உயிராக நேசித்தோம் அவரும் எங்களை உயிராக நேசித்திருக்கிறார்.

நீங்கள் சொல்வதை போன்று அவருடைய கடைசி காலம் என்று சொல்கிறீர்கள் அவருடைய ஆயுளை குறைக்கிறீர்கள் அவரை பாதுகாக்க வேண்டிய கடமை எத்தனை ஆண்டு காலம் நாங்கள் பாதுகாத்திருக்கிறோம் மூன்று முறை அவருடைய உயிரை எங்கள் உயிரை பணயம் வைத்து பாதுகாத்தோம். இனி காக்க வேண்டிய கடமை துறையின் கையில் இருக்கிறது எனவே வைகோ அவர்கள் நலனை நாங்கள் மிகுந்த அக்கறையோடு கவலையோடு பார்க்கிறோம் தலைவர் வைகோ இன்னும் நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து திராவிட இயக்க இலட்சங்களை வென்றெடுக்க வேண்டும் அந்த களத்தில் இருக்க வேண்டும். முதலமைச்சரே சந்தித்து விட்டு எக்காரணத்தைக் கொண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று வைகோ அறிவித்திருக்கிறார் அதை வரவேற்கிறோம். அதில் உறுதியாக இருக்க வேண்டும். திராவிட இயக்கத்தின் வளர்ச்சி நிலை காக்கின்ற களத்தில் நாங்கள் எங்களை அர்ப்பணித்திருக்கிறோம். குறைந்தபட்சம் கூட அரசியல் பக்குவப்படாமல் துரை வைகோ இருக்கிறார் என்று கூறினார்.

பிரேமலதாவுக்கு 8 சீட்! ஓபிஎஸ்-க்கு 0!  அறிவாலயத்தில் நடந்தது என்ன? வல்லம் பஷீர் ஒபன் டாக்!

MUST READ