spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஆர்.சுதா எம்.பி பேட்டி

டெல்லியில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை – ஆர்.சுதா எம்.பி பேட்டி

-

- Advertisement -

டெல்லியில் நடை பயிற்சியின் போது  தங்க சங்கிலியை மா்ம நபர் ஒருவா் பறித்துக் கொண்டு சென்றதாக மா்ம நபர் ஆர்.சுதா பேட்டியளித்துள்ளாா்.டெல்லியில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை -  ஆர்.சுதா எம்.பி பேட்டிதங்க சங்கிலி பறிப்பு தொடர்பாக மக்களவை உறுப்பினர் ஆர்.சுதா பேட்டி:-

டெல்லியில் மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருக்கக் கூடிய தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் காலை நடை பயிற்சி மேற்கொண்ட போது மா்ம நபர் ஒருவர் வாகனத்தில் வந்து தான் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு சர்வ சாதாரணமாக எந்த பதட்டமும் இல்லாமல் சென்றார்.

we-r-hiring

இந்த சம்பவம் நடைபெற்ற போது, அந்த பகுதியில் ஒரு போலீசார் கூட பாதுகாப்பு பணியில் ரோந்து பணியிலோ இல்லை சற்று நேரத்திற்கு பின்பாக அந்த பகுதியில் இருந்து பணியில் வந்த போலீசாரிடம் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக தெரிவித்தோம். ஆனால் நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என்று மட்டுமே தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது இவ்வளவு பாதுகாப்பான தூதரகங்கள் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் இதுபோன்ற ஒரு செயின் பறிப்பு சம்பவம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு நடைபெற்றிருக்கிறது என்றால் இந்த நாட்டில் பிற பெண்கள் இதுபோன்று செல்லும் போது அவர்களுக்கு எதிரான கொடுமை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

காவல்துறையினரும் அலட்சிய போக்குடனே நடந்து கொண்டனர் என்பது வேதனைக்குரியது. இந்த சம்பவம் தொடர்பாக மக்களை சபாநாயகர் இடம் புகார் அளித்துள்ளோம் மேலும் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம். நாடு முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது. தலைநகர் டெல்லியில் இரட்டை எஞ்சின் அரசாங்கம் இருந்த போதும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது என தெரிவித்தார்.

திமுக 200+ தொகுதிகள் வெல்லும்! கூட்டணியில் தேமுதிக, ராமதாஸ் உறுதி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

MUST READ