spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிமுக 200+ தொகுதிகள் வெல்லும்! கூட்டணியில் தேமுதிக, ராமதாஸ் உறுதி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

திமுக 200+ தொகுதிகள் வெல்லும்! கூட்டணியில் தேமுதிக, ராமதாஸ் உறுதி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் சேராமல் ராமதாஸ், ஓபிஎஸ் போன்றவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களை நிறுத்தினால், அதிமுக – பாஜக கூட்டணிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுகவை நோக்கில் ஓபிஎஸ், தேமுதிக என பல்வேறு கட்சிகள் படையெடுத்து வருவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளது :- மருத்துவமனையில் இருந்து திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து வருகின்றனர். முதலமைச்சர இன்னும் பெரிய மெகா கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எண்ணுகிறார். அவருடைய சிறப்பு அம்சம் என்ன என்றால் அவரிடம் பணிவு உள்ளது. கூட்டணி கட்சிகளை 7 வருடங்களாக தக்க வைத்திருப்பது என்பது மிகவும் சிரமமான காரியமாகும். கலைஞர் காலத்தில் கூட அது சாத்தியமற்றதாக தான் இருந்தது. பல கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியே போகும். திடீரென கூட்டணிக்குள் வரும். ஆனால் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுடன் அனுசரித்து செல்கிறார். அவர்கள் எப்போது சந்திக்க நேரம் கேட்டாலும், ஒதுக்கித் தருகிறார். அதன் காரணமாக திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகள் எதுவும் வெளியே போகாது. அதேவேளையில் கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கவும் அவர் தயாராக உள்ளார். இதில் சீட்டுகள் வழங்குவது தான் பிரச்சினையாகும்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள இடங்கள் 234. அதில் குறைந்தபட்சம் 170 தொகுதிகளிலாவது திமுக போட்டியிட வேண்டும்.  180 தொகுதிகள் வரை அவர்கள் போட்டியிடலாம் என்று நினைப்பார்கள். காங்கிரசுக்கு எப்படியும் 20 – 25 இடங்கள் கெடுத்தாக வேண்டும். எஞ்சிய இடங்களை தான் கூட்டணி கட்சிகளுக்கு தர வேண்டும். கடந்த தேர்தலில் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தலா 6 இடங்களை கொடுத்தனர். அதேபோல் இந்த முறை 6 இடங்களை தருவார்களா? அல்லது கூடுதலாக 2 இடங்கள் சேர்த்து 8 ஆக தருவார்களா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த இடத்தில்தான் 3 பேர் புதிதாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் வர வாய்ப்பு உள்ளது. தேமுதிக உறுதியாக திமுக கூட்டணிக்கு வரும் என்றுதான் நினைக்கிறேன். மூன்றாவதாக பாமகவின் ஒரு பிரிவு வரலாம். மருத்துவர் ராமதாஸ் பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுகிறார். அடுத்த 10 நிமிடத்தில் அன்புமணி போட்டி பொதுக்குழுவை கூட்டுகிறார். இப்படி போட்டி பொதுக்குழு நடத்திய மற்ற கட்சிகள் என்ன ஆனது என்று எல்லோருக்கும் தெரியும்.

மருத்துவர் ராமதாஸ், தான் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்ததாகவும், நேரில் சென்று சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று சொல்கிறார். அப்போது நாங்கள் உங்களோடு இருப்போம் என்று முதலமைச்சரிடம் சொன்னதாக ராமதாஸ் சொல்கிறார். அதற்கு என்ன அர்த்தம் என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறபோது, முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மட்டுமே தான் பேசியதாக விளக்கம் அளித்தார். மேலும், பாமக அலுவலக முகவரி அன்புமணியின் பெயரில் இருப்பதாக கேள்வி எழுப்பினர். அப்போது, ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி என்று சொல்கிறார். அதன் பிறகு பொதுக்குழு தேதியை அறிவித்தார். உடனடியாக அன்புமணி, பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவிக்கிறார். அப்போது பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் போட்டால் அதை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். அன்புமணி முன்கூட்டியே தீர்மானம் போட்டு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது பாமக இரண்டாக பிரிந்துள்ளது. அப்போது, ராமதாஸ் தலைமையிலான திமுக பாஜக கூட்டணிக்கு செல்லாது. அது திமுக கூட்டணிக்கு வந்தால், அங்கே இடநெருக்கடி உள்ளது.

அவ்வாறு இல்லாவிட்டால் அன்புமணி பாமக வேட்பாளர்களை நிறுத்தும் இடங்களில், ராமதாஸ் வேட்பாளர்களை நிறுத்துவார். அப்படி நிறுத்துபவர்கள் நிச்சயம் உள்ளுரில் செல்வாக்கு மிக்கவர்களாக தான் இருப்பார்கள். அவர்கள் பாமகவின் வாக்குகளை பிரித்தால், அதிமுக – பாஜகவுக்கு தான் நஷ்டமாகும். எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி பெறுவதற்கு ஒன்றுபட்ட அதிமுக வேண்டும். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மாவட்டங்களில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஒன்றுபட்ட பாமக அவசியமாகும். பாமக, திமுகவோடு கூட்டணிக்கு வந்தாலும், வராவிட்டாலும் இப்படியே இருப்பது லாபமாகும். மருத்துவர் ராமதாஸ், திமுகவோடு நெருக்கமாக உள்ளார். இது இயல்பாக எதை நோக்கி செல்லும்?  ஒன்று இடம் தர முடிந்தால் உங்களுக்கு தருகிறோம். அப்படி இல்லாவிட்டால் இப்படியே தொடருங்கள் என்பார்.

ஓபிஎஸ்க்கும் இதே நிலைதான். ஓபிஎஸ் தனக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில் வேட்பாளரை நிறுத்தினால் அதிமுக வாக்குகள் பிரியும். 5000 வாக்குகள் பிரிந்தாலும் கூட திமுகவுக்கு லாபம். அவர்கள் 200 இடங்களில் வெற்றிபெற்று விடுவார்கள். திமுக அணிக்கு 30 சதவீத வாக்குகள் உள்ளன. அதற்கு எதிராக 70 சதவீத வாக்குகள் உள்ளன. கண்ணுக்கு தெரிந்து அதிமுக, விஜய், சீமான் போன்றவர்கள் வாக்குகளை பிரிக்கிறார்கள். கண்ணுக்கு தெரியாமல் பிரிப்பது மருத்துவர் ராமதாஸ், ஓபிஎஸ் அணிகள் பிரிக்கின்றன. இது தவிர்த்து எண்ணற்ற சுயேட்சைகள் பிரிக்கிறார்கள். அப்போது 30 – 35 சதவீத வாக்குகளை பெற்றாலே 200 தொகுதிகளில் வெல்ல முடியும். நமக்கு எதிரான வாக்குகள் எவ்வளவு பிளவுபட்டாலும், நமக்கு நல்லதுதான், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ