கொரோனா காலகட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு எல்லோருக்கும் முன்னுரிமை மதிப்பெண் என்று சொல்கிறார்கள் அது எங்களுக்கு பொருந்தாதா? என்ற முழுக்கங்களோடு தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் 13 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யவேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 13 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டி தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மாநில மைய நல சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்கள் உயிரையும் பனையம் வைத்து கொரோனா வார்டை சுத்தம் செய்தோம், போக்குவரத்து இல்லா காலத்திலும் விடுமுறையில்லாமல் பணி செய்தோம், கொரோனா காலகட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு எல்லோருக்கும் முன்னுரிமை மதிப்பெண் என்று சொல்கிறார்கள் அது எங்களுக்கு பொருந்தாதா? என்ற முழுக்கங்களோடு 200க்கும் மேற்பட்ட அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – TTV தினகரன் கண்டனம்
