spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமாவீரர் ஒண்டிவீரன் நினைவுநாள்…முதல்வர் புகழாரம்…

மாவீரர் ஒண்டிவீரன் நினைவுநாள்…முதல்வர் புகழாரம்…

-

- Advertisement -

ஒண்டிவீரனின் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மாவீரர் ஒண்டிவீரன் நினைவுநாள்…முதல்வர் புகழாரம்…மேலும், இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆங்கிலேயருக்கு நெல்லைக் கப்பமாகக் கட்டமறுத்து, நெற்கட்டும் செவலை, நெற்கட்டான்செவலாக மாற்றி, அந்நிய ஆதிக்கத்திற்குச் சவால் விட்ட தென்மலைப் போரின் மாவீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளில் அவருக்கு என் வீரவணக்கம். சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலை உணர்வோடு தென்தமிழ்நாட்டின் தீரர்களான பூலித்தேவனும் படைத்தளபதி ஒண்டிவீரனும் போர் செய்தனர் எனும் வீர வரலாற்றை இந்தியா முழுவதும் பரவச் செய்திட இந்நாளில் உறுதியேற்போம்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க தடையில்லை – உயர்நீதிமன்றம்

we-r-hiring

 

MUST READ