அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த விதி திருத்தங்களை எதிர்த்து, கே.சி. பழனிசாமியின் மகன் சுரேன் மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் 2022-இல் சிவில் வழக்கு தொடர அனுமதி கோரினர். அவர்களது கோரிக்கையை தனிநீதிபதி ஏற்று, வழக்கு தொடர அனுமதி அளித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ஆகியோர், “அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்களை எதிர்த்து சிவில் வழக்கு தொடர அனுமதி இல்லை” என்று உத்தரவிட்டுள்ளனர்.

இதன் மூலம், தனிநீதிபதி வழங்கிய வழக்கு தொடர அனுமதி உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.